Saturday, September 19, 2026
கரிகாலன்

கரிகாலன்

கடலூர் மாவட்டத்தில் மணிமுத்தாறு, வெள்ளாறு, எனும் இரண்டு நதிகளுக்கும் இடையே உள்ள மருங்கூர் எனும் கிராமத்தில், 1965 ஆம் ஆண்டு ஜூலை 28 இல் பிறந்தவர் கரிகாலன். பெற்றோர், இரத்தினசபாபதி, இராசலட்சுமி. இவரது தந்தை ஆசிரியராகவும் கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கரிகாலனின் இலக்கிய ஆர்வத்தை இளம் வயதிலிருந்து ஊக்குவித்தவர்.

கரிகாலன், ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டமும், கல்வி இயலில் இளங்கலையும் பயின்றவர். அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரது மனைவி சு.தமிழ்ச்செல்வி. திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளத்தில் பிறந்தவர். பெற்றோர், சுப்ரமணியன், முத்துலட்சுமி. தமிழின் முன்னணி எழுத்தாளர். அரசுப் பள்ளி தலைமையாசிரியர்.

கரிகாலன் தனது இலக்கியப் பங்களிப்புகளுக்காக கதா விருது, ஏலாதி இலக்கிய விருது, சுஜாதா அவார்ட்ஸ், தி.ஜா நினைவுப் பரிசு, ஜெயந்தன் நினைவு விருது, வே.சபாநாயகம் நினைவு விருது, போன்ற பெருமைகளைப் பெற்றுள்ளார்.

இவரது சில கவிதைகள், ஆங்கிலம், மலையாளம், இந்தி, வங்க மொழிகளில் வெளியாகியுள்ளன. களம் புதிது சிற்றிதழின் ஆசிரியராகவும், நான்காவது கோணம் இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டிருக்கிறார்.

சிறந்த கவிஞர்களுக்கு களம்புதிது விருது வழங்கி வருகிறார். ஊராகாலி, எனும் இவரது சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஜெ.என்.யு பல்கலைக் கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறையின், பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருந்தது. பண்பாடு, கலை, நுண் அரசியல் வெளிகளில் தொடர்ந்து இயங்கிவருகிறார். உலகத் திரைப்படங்கள் குறித்து வெகுசன இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இலக்கியம் பண்பாடு சார்ந்த இவரது சமூக ஊடகப் பங்களிப்புகள் பயனுடையவை.

இந்தியாவில் தலித் சினிமா

ஒரு சமூகத்தின் பண்பாட்டுச் சுழற்சியிலும் விடுதலைப் பாதையிலும் ஒடுக்கப்பட்டோரின் கலை அழகியல் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. பாரம்பரிய கலை அழகியல், மையநீரோட்ட அழகியல் போன்றவை பெரும்பாலும் மேலாதிக்கக்...

மேலும் படிக்கDetails