Friday, October 2, 2026
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

பிள்ளைக் கனியமுதே

சு. தமிழ்ச்செல்வி By சு. தமிழ்ச்செல்வி
2 days ago
In இதழ் – 1, இதழ்கள், தொடர்
A A
0
Pillai Kaniyamudhe

அந்த அதிகாலை பொழுதின் மங்கலான மின்விளக்கின் வெளிச்சத்தில் பட்டாம்பூச்சிகளாய் பிள்ளைகள் பள்ளி வளாகமெங்கும் சிறகடித்துக் கொண்டிருந்தார்கள். சில பெற்றோர் அவர்களது பிள்ளைகளைப் பிடித்து வைத்துக்கொண்டு முடிந்தமட்டும் அறிவுரைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள். “டீச்சர் கூடவே இருக்கணும்.” “ஒத்தயில எங்கயும் போயிறக்கூடாது.” ” கூட்டாளி சேத்துக்கிட்டு தனி வழியில போயிறக் கூடாது.” “டீச்சருக்கு தெரியாம எதயாவுது வாங்கி வாயில போட்டுறக்கூடாது.” “தெரியாத ஆளுங்க ஏதாவுது ஆசவார்த்த சொல்லி கூப்பிட்டா நம்பி பின்னாலயே போயிடக்கூடாது.” பிள்ளைகள் எல்லாவற்றிற்கும் சரி சரி என்று பெருமாள் கோவில் மாடுமாதிரி தலையாட்டினார்களே தவிர அவர்களின் சிந்தையில் அவை ஏதும் பதியவில்லை. ஒருவிதமான உற்சாகம் அவர்கள் அனைவரையும் தொற்றிக்கொண்டிருந்தது. கடந்த மூன்று வருடங்களாகத்தான் இந்த பள்ளியில் இது வழக்கத்திற்கு வந்திருக்கிறது. இதுவரை இதுபோன்று இந்த பள்ளியில் பிள்ளைகளை யாரும் சுற்றுலா அழைத்துச் சென்றதில்லை. எனவே இது இந்த பிள்ளைகளுக்கு புது அனுபவமாக இருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு கிடைக்காத அனுபவம் இது. அரசுப்பள்ளி பிள்ளைகளை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. அதனால் பள்ளி நாட்களில் போகமுடியாது. ஞாயிற்றுக்கிழமைகளில் பெற்றோர்கள் சம்மதத்துடன் ஆசிரியர்கள் தம் சொந்த பொறுப்பில் அழைத்துச் செல்கிறார்கள். ஆரம்பத்தில் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம் என்று சொன்னபோது பெற்றோர்கள் ரொம்பவே தயங்கினார்கள். பிள்ளைகள் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் அனுப்பி வைத்தார்கள். திருச்சி, முக்கொம்பு, கல்லணை, தஞ்சாவூர் பெரிய கோயில் என ஒரே நாளில் பல இடங்களையும் பார்த்துவிட்டு வந்து சேர இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. டீச்சர்களின் போன் நம்பர் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. பேருந்தில் ஏற்றி அனுப்பியது முதல் அவ்வப்போது கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருந்தார்கள். டீச்சர்களும் எங்கே இருக்கிறோம் எப்போது சாப்பிட்டோம் என்று தகவல்களை சொல்லிக்கொண்டேதான் இருந்தார்கள். ஆறுமணி ஆனதும் பெற்றோர்கள் பலரும் போன்மேல் போன்போட்டு எல்லா டீச்சர்களையும் நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். எல்லா இடங்களையும் திட்டமிட்டபடி பார்த்து முடித்துவிட்டு இப்போதுதான் திரும்பிக் கொண்டிருக்கிறோம். இந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறோம். ஊர் வந்து சேர இன்னும் இவ்வளவு நேரம் ஆகும். பிள்ளைகள் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்று எவ்வளவு விளக்கமாய் எடுத்துச் சொல்லியபோதும் பெற்றோரால் பொறுத்திருக்க முடியவில்லை. சிலர் போனிலேயே வசைபாட ஆரம்பித்திருந்தார்கள். பத்துமணிக்கு மேல் பிள்ளைகளை கொண்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்த பிறகுதான் டீச்சர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது. அடுத்த ஆண்டு பெரும்பாலான பெற்றோர் பிள்ளைகளை அனுப்பிவைக்க தாமாக முன்வந்திருந்தார்கள். இந்த முறை டீச்சர்கள் உஷாராக பெற்றோரிடம் நான்கைந்து உறுதிமொழிகளை பெற்றுக்கொண்டார்கள். ‘அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் மட்டுமே போன் செய்து விசாரிக்க வேண்டும். அதுவும் இரண்டு மணிநேர இடைவெளியில் தான் பேச வேண்டும். இரவு திரும்பி வர தாமதமானாலும் காத்திருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு உடம்பு முடியாமல் போனாலோ வேறேதும் பிரச்சனைகள் என்றாலோ நாங்களே உங்களுக்கு தெரிவிப்போம்.’ என்று. இந்த முறை பெற்றோர் எந்தவித தயக்கமும் இன்றி பிள்ளைகளை அனுப்ப முன்வந்திருந்தார்கள். ஆனாலும் வழக்கம் போல இப்போதும் அவர்களுக்கு பணம் மட்டுமே பிரச்சனையாக இருந்தது. இருந்த போதும் அதைப்பற்றி அவர்கள் பெரிதாய் கவலைப்படவில்லை. அவர்களுக்கு போனது போலவே பிள்ளை திரும்பி வரவேண்டும். அது மட்டும் தான் அவர்களின் கவலையாக இருந்தது. நல்லதோ கெட்டதோ எல்லாவற்றிற்கும் ஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதில் பிள்ளைகளுக்கான செலவுகளும் அடங்கியிருந்தது. பிள்ளைகள் எல்லோருமே வர ஆசைப்படுவார்கள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களால் போக்குவரத்திற்கு ஆகக்கூடிய செலவைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. “வேல செஞ்ச எடத்துல கூலி இன்னும் தரல. வந்த பெறகு தந்தர்றன் டீச்சர். யாம் புள்ளையவும் கூட்டிட்டு போங்க. ” என்பார்கள். “ஐம்பது ரூவாதான் டீச்சர் இருக்குது. இத வச்சிக்கிங்க. எம்புள்ளிய விட்டுட்டு போயிறாதிங்க” என்பார்கள். பணம் கட்டாத மாணவர்களை வராதே என்று கண்டித்து சொல்லவும் முடியாது. எல்லா செலவுகளையும் அந்தந்த வகுப்பு ஆசிரியர்களே தான் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும். ஒன்றாம் வகுப்பு டீச்சருக்கும் இரண்டாம் வகுப்பு டீச்சருக்கும் பிரச்சினையில்லை. அவர்களின் வகுப்பு பிள்ளைகள் யாரையும் அழைத்துச் செல்ல முடியாது. மூன்று, நான்கு, ஐந்து வகுப்பு பிள்ளைகள் மட்டுமே வரமுடியும். “எல்லோரும் வந்தாச்சா?” என்றார் தலைமையாசிரியர். “வந்துட்டாங்க டீச்சர்” என்றார் மஞ்சுளா டீச்சர். “வரிசையா ஒக்கார வச்சி பேரு படிச்சிருங்க.” மாணவர்கள் வகுப்பு வாரியாக உட்கார வைக்கப்பட்டார்கள். அந்தந்த வகுப்பாசிரியர்களிடம் பெயர்ப்பட்டியல் இருந்தது. பெயர் படிக்க படிக்க உள்ளேனம்மா சொல்லிக்கொண்டிருந்தார்கள். மூன்றாம் வகுப்பு முடிந்து நான்காம் வகுப்பு மாணவர்களின் பெயர்களை படித்தார் மாலா டீச்சர். “பிரகாஷ்” “பிரகாஷ் ” எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். பிரகாஷைக் காணவில்லை. “பிரகாஷ் வரலயாடா?” “அவன் எப்பயோ வந்துட்டான் டீச்சர். இன்னமட்டும் இங்க தான் டீச்சர் இருந்தான்?” “எங்கடா பெயிட்டான் அந்த லூசுப்பய?” பிரகாஷின் அம்மா இன்னொரு பிள்ளையின் அம்மாவிடம் வேலைக்கு வரலாமா என்று கேட்டு அது பற்றி பேசிக்கொண்டிருந்ததில் பிரகாஷ் பெயர் கூப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை. ஆளாளுக்கு ‘பிரகாஷ் பிரகாஷ்’ என்று கூப்பிடவும் அவனுடைய அம்மா பதறிப்போய் எழுந்து ஓடிவந்தாள். “இப்ப நின்னானே அதுக்குள்ள எங்க போனான்?” அங்குமிங்குமாய் ஓடியலைந்தாள் அவள். அதே நேரம் சாலையோரமிருந்து வேகமாய் ஓடிவந்தான் பிரகாஷ். “எலேய் டீச்சர் பேரு கூப்புடுறாங்க பாருடா. ஓம்பேர கூப்பிட்டாங்க போயி சொல்லு.” ஓடிவந்தவனின் புரடியில் கைவைத்து தள்ளி விட்டாள் அவனுடைய அம்மா. “பிரகாஷ். எங்கடா போயிருந்த?” டீச்சரின் கோவத்தையோ அவர் அதட்டுவதையோ அவன் கவனிக்கவில்லை. வேகவேகமாய் ஓடிவந்தவன் சட்டென்று விரைப்பாய் நின்றான். வகுப்பறையில் வருகை சொல்வது போல நெற்றியில் கைவைத்து சல்யூட் அடித்தபடி “என் நாடு, என் மொழி, என் இனம் காக்க உள்ளேனம்மா” என்றான் சத்தமாக. அவன் கூறியதைக் கேட்டு மற்ற மாணவர்கள் ‘ஹே’ என்று சிரித்தனர். கோவமாக இருந்த டீச்சர்கள் எல்லோரும்கூட சிரித்துவிட்டார்கள். சுற்றிலும் நின்று பார்த்துக்கொண்டிருந்த மற்ற பெற்றோர்களும் சிரித்தார்கள். எல்லோரும் சிரிப்பதற்கான காரணம் புரியாமல் நாலாபுறமும் பார்த்தபடி திருதிருவென விழித்தான் அவன். “டேய், ஒன்ன பாதுகாக்குறதேத்தான் எங்களுக்கு பெரும்பாடா போகுதேடா. இதுல நீ நாட்டயும் வூட்டயும் காக்கப் போறியா?” என்றாள் மாலா டீச்சர். இப்போதும் கூட அவனுக்கு எதுவும் புரியவில்லை. குறுகுறுவென்று பார்த்தபடி நின்றான். அவ்வப்போது கால்சட்டைப் பையில் இருக்கும் எதுவோ ஒன்றை தடவிப் பார்த்துக்கொண்டான். “எங்கடா போன?” “ஏரிக்கு போனன் டீச்சர்.” ஏரிக்கு போனேன் என்று சொல்லி விட்டால் டீச்சர் அதற்குமேல் கேள்வி கேட்க மாட்டார் என நினைத்தான். “ஏரிக்கு போறன்னு யார்கிட்ட சொல்லிட்டு போன?” ‘இது வேறயா? யார சொல்லலாம். தன்னுடன் படிக்கும் வகுப்பு நண்பர்கள் யார் பெயரையும் சொல்ல முடியாது. உடனே பொய் சொல்றான் டீச்சர் என்று மாட்டிவிட்டு விடுவார்கள். வேறு டீச்சர்களிள் பெயர்களையும் சொல்லி தப்பிக்க முடியாது. அவன் தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். அவள் நாக்கைத் துறுத்தி,பொய் சொன்னே மவனே கொன்னுருவன் பாத்துக்க என்பதுபோல ஆட்காட்டி விரலை அசைத்து பயமுறுத்தினாள். சரி நமக்கு இங்கு யாரும் உதவுவாரில்லை. நாமேதான் சமாளித்தாக வேண்டுமென்று அந்த நொடிப்பொழுதிற்குள் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தான் பிரகாஷ். “டீச்சர் ரொம்ப வயத்த வலிச்சிது டீச்சர். ஒங்க கிட்ட சொல்ல முடியாம அவசர அவசரமா ஏரிக்கு ஓடிட்டன் டீச்சர். ” இதற்கு மேல் மாலா டீச்சரால் அவனை என்ன சொல்லி திட்ட முடியும்?” “அப்புடி என்னத்தடா சாப்புட்டே. வயத்துக்கு ஒத்துக்காத எதையும் சாப்பிடக்கூடாதுன்னு ஒரு வார காலமா சொல்லிக்கிட்டு இருந்தமா இல்லயா?” “சொன்னிங்க டீச்சர்.” “அப்பறம் ஏண்டா கண்டதையும் தின்ன?” “நான் கண்டதயும் திங்கல டீச்சர். சாமி சத்தியமா சோறுதான் தின்னன். ” “அப்பறம் யாண்டா வயத்த வலிச்சிது?” “வயத்தாலயெல்லாம் போவல டீச்சர். எனக்கு நல்ல ஆயி வந்தாலுமே வயத்த வலிக்கும்தான் டீச்சர்.” இப்போது கூடியிருந்த பிள்ளைகள் பெற்றோர்கள் எல்லோருமே கொல்லென்று சிரித்து விட்டார்கள். மாலா டீச்சருக்கு ஒருமாதிரி கூச்சமாகி விட்டது. “டேய், போடா … போடா .. போயி ஒக்காரு ” என்ற மாலா டீச்சருக்கு மற்றவர்கள் தன்னை பரிதாபமாக பார்ப்பது போல தோன்றியது. எல்லாவற்றையும் அவ்வப்போது கவனித்தபடி தம் பணிகளை செய்துகொண்டிருந்த தலைமையாசிரியர் ரேவதி அங்கு வரவே அவரிடம் ஆற்றாமையோடு முறையிட்டாள் மாலா டீச்சர். “டீச்சர் இந்த பிரகாஷ் பயல டூர் போயி திரும்பி வார வரைக்கும் யார்கிட்டயாவது ஒப்படச்சிருங்க டீச்சர். என்னால இவன கண்ட்ரோல் பண்ண முடியாது.” “என்னாச்சி? எதுக்கு இப்ப அவன்மேல இவ்வளவ கோவம்?” என்றாள் எதுவும் தெரியாதது போல. “டீச்சர், நேம் லிஸ்ட் வாசிக்கும்போது ஆளக்காணும். தேடிப்பாத்தா அப்பதான் ஏரிக்கு போனன்னு ஓடி வாரன். யாருகிட்டயுமே சொல்லாம போயிருக்கான்.” “இங்க டாய்லெட் இருக்குல்ல? எதுக்கு ஏரிக்கு போகனும்?” “அதான நீங்களே கேளுங்க டீச்சர்.” என்றாள் மாலா டீச்சர். ரேவதி பிரகாஷை உற்று பார்த்தாள். மாலா டீச்சரின் செய்கையோ அல்லது அவன் செய்த திருட்டுத்தனத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற எண்ணமோ தெரியவில்லை ஒருவித நமட்டுச் சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தான். அவனது கால்களைப் பார்த்தவளுக்கு அவன் ஏரிக்கு போய்வரவில்லை என்பது புரிந்து போனது. ரேவதியின் பார்வையை எதிர் கொண்டவன் ஒரு கணம் அதிர்ந்து போனான். அதுவரை முகத்தில் படர்ந்திருந்த தெனாவெட்டும் இதழ்களில் நெளிந்து கொண்டிருந்த நமட்டுச் சிரிப்பும் சட்டென்று மறைந்து போனது. ‘எச்சமம்மா எதையோ கண்டுபுடிச்சிட்டாங்க. டூருக்கு கூட்டிட்டுப்போகாம விட்டுட்டு போகப்போறாங்க’ என்ற எண்ணம் தோன்றியது. கால்சட்டைப் பையிக்குள்ளிருந்து மெதுவாக கையை எடுத்துக்கொண்டான். பவ்வியமாய் நல்ல பிள்ளைபோல கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான். அப்படியும் இயல்பாய் அவனால் நிற்க முடியவில்லை. அவன் அம்மாவைப் போலவே மெலிந்த தேகம் அவனுக்கு. சிவப்பு நிறம். எப்போதும் துருதுருவென்று ஓடவும் எதையாவது செய்யவும் தயாராய் இருப்பது போன்ற கைகால்கள். அதற்கு பொறுத்தமான பெரிய கண்கள். சிரித்தால்கூட தாரை தாரையாய் கண்ணீரை சிந்தக் கூடிய கண்கள் அவை. இடுப்பில் ஒரு நாளும் கால்சட்டை தங்காது. எப்போதும் ஒரு கையால் கால்சட்டையை பிடித்தபடியே அலைவான். இன்று அவன் அம்மா பொத்தான் வைத்து தைத்து மாட்டிவிட்டிருக்கிறாள். போதாத குறைக்கு ஊக்கு வேறு. கால்சட்டை ஊக்கு தான் குத்திவிட்டது போல அப்படியே இருப்பதைப் பார்த்த பிரகாஷின் அம்மா சாந்திக்கும் அவன் பொய் சொல்கிறான் என்பது புரிந்து போனது . இருந்தாலும் எல்லார் முன்னாலும் மகனைக் காட்டிக்கொடுக்க அவளுக்கு மனம் வரவில்லை. டூர் போய்வரட்டும் பிறகு கண்டித்துக்கொள்ளலாம் என்று அமைதியாக இருந்துவிட்டாள். தலைமையாசிரியர் ரேவதி அவன் கால்களை உற்று பார்ப்பதை உணர்ந்தவன் நெளிய ஆரம்பித்தான். ரேவதிக்கு நன்றாக புரிந்து போனது. பிரகாஷ் ஏதோ தப்பு செய்திருக்கிறான் என்பது. அதற்கு மேலும் அவனை நிலைகுலைய வைக்க விரும்பவில்லை அவள். அவன் அம்மா சாந்தி நினைத்தது போலவே அவளும் டூர் போய் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்து விட்டுவிட்டாள்.

Previous Post

இந்த கோடையில்…

Next Post

ஏன் எழுதுகிறேன்..

சு. தமிழ்ச்செல்வி

சு. தமிழ்ச்செல்வி

கன்னி

Next Post
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Amma Immurai Calendarai Paarkkavillai

அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை

October 2, 2026
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

October 2, 2026
Panpaattu Tharkolai

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

October 2, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 2, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

0
Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

0
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

0
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

0
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

October 2, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 2, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ் – 1 (18)
  • இதழ்கள் (18)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (2)
  • கவிதை (3)
  • கவிதை (4)
  • சிறுகதை (6)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (5)
  • தலையங்கம் (1)
  • தொடர் (3)
  • நேர்காணல் (1)
  • படைப்புகள் (12)
  • மொழிபெயர்ப்பு (1)
  • மொழிபெயர்ப்பு கவிதை (1)
  • மொழிபெயர்ப்பு சிறுகதை (1)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • காட்சியகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு