Friday, October 2, 2026
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

ஏன் எழுதுகிறேன்..

சீனு ராமசாமி By சீனு ராமசாமி
2 days ago
In இதழ் – 1, இதழ்கள், தொடர், நேர்காணல், படைப்புகள்
A A
0
Thodarottam

சீனு ராமசாமி

1. எப்படி எழுத ஆரம்பித்தீர்கள்?

 எதற்காக? ஏன் எழுதுகிறீர்கள்?

“நான் ஏன் எழுதுகிறேன்?” என்று கேட்கிறீர்கள். இதற்கு முன்னால் இருந்த கவிஞர்கள், படைப்பாளிகள் ஏன் எழுதினார்கள்? அதில் பலரின் பெயர்கூடத் தெரியாமல் ஏன் போனது?  என் சங்கத் தமிழ் மரபில் பெயரின்றி மறைந்த முப்பாட்டன் தமிழ்ப் புலவர்கள். அவர்களிடமிருந்து நான் கற்றது என்ன? 

பெயர் அழிந்து, மொழியின் உணர்வோடு கலப்பது. 

நான் ஏன் எழுதுகிறேன்?

எனக்குக் கோபம் வருகிறது,

எனக்கு அழுகை வருகிறது,

எனக்குச் சிரிப்பு வருகிறது,

நையாண்டி வருகிறது,

எனக்குக் காமம் வருகிறது,

எனக்குக் காதல் வருகிறது,

எனக்குத் துரோகம் நடக்கிறது,

நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன்.

இவையாவும் என் நிலத்துக்கும் ஏற்படுகிறது, நிலத்தில் இருக்கும் மக்களுக்கும் ஏற்படுகிறது. நான் எழுதுகிறேன் என்றால் வினைபுரிகிறேனா? ஏதோ ஒன்று புரிகிறேன். அது மொழியின் வடிவில் கவிதையாக மாறுகிறது. அது ஒரு கவிதைதானா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.

நான் வயலின் வாசிக்கவில்லை, 

நின்று, நிதானித்து, நிதானமாக வாசிப்பதற்கு.

சுற்றிப் பற்றி எரியும்போது…

“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்

வாக்கினிலே ஒளி உண்டாகும்”

என்று சுப்பிரமணிய பாரதியார் சொல்லியிருக்கிறார்.

இங்குப் பலர் படைத்துவிட்டனர்,

நிறைய எழுதியவர்களைக் காணவில்லை.

அவர்கள் எழுத்துகள் என்னவாயின என்று தெரியவில்லை,ன. திரும்பவும் தேடிப் படிக்கிறார்களா என்றும் தோன்றவில்லை.

அங்கு எவனோ வருகிறான்,

அவனுக்கு அது தேவையாக இருக்கிறது, எடுத்துச் செல்கிறான். அவன் முடிவு செய்ய வேண்டும் 

இது ஒரு பித்து.

கவிதை எழுதுவது மட்டுமல்ல.

கலைகளில் ஈடுபடுவது எல்லாமே பித்து.

பித்துப் பிடித்தவரிடம் போய், “உனக்கு எப்படி பித்துப் பிடித்தது?” என்று கேட்பதுபோல் இருக்கிறது “நீ ஏன் எழுதுகிறாய்?” என்று கேட்பது. பித்துப் பிடித்தவனின் கூத்தைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.

கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது

அவனுக்குப் பதில் தெரியாது.

எனக்கும் தெரியாது.

●

இதுவரை எழுதியதில், மனநிறைவு கொடுத்தப் படைப்பு/நிகழ்வு?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 

திரைப்படங்களை விட 

என் கட்டுரைகளை விட

என் கவிதைகளே மன அமைதியைத் தருகின்றன.

திரைப்படங்களில் பெரும் வணிகம் இருக்கிறது.

கவிதை அப்படி அல்ல.

இந்த பிரபஞ்சத்துக்கான செல்வம் இருக்கிறது .

பெரும்பான்மை மக்கள் விரும்பி வந்து வாங்குவதில்லை .

இந்த உலகத்துக்குத் தேவையில்லாமல் இருக்கிறது .

மிகவும் தேவையாகவும் இருக்கிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் காற்று எந்தப் பிரதிபலனும் பாராமல் என்னை தழுவிக்கொள்கிறது.

அதன் பாதத்தில் என்னிடம் வைப்பதற்கு கவிதைகளே இருக்கின்றன.

●

யாரை முன்னோடியாக (school of thoughts) வரித்துக்கொண்டிருக்கிறீர்கள்?

சமகாலக் கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன். 

நிறைய எழுதுகிறார்கள்.

நவீன யதார்த்தத் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவை மிகவும் இணக்கமாக இருக்கின்றன எனக்கு.

●

இலக்கு?

நான் 

முதலிடத்தை நோக்கிச் செல்பவன் அல்ல,

விருப்பமான இடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பவன்.

விருப்பமான இடத்தை நோக்கிச் 

செல்வதற்கு 

கவிதையும் இலக்கியமும் திரைப்படங்களும் 

விருப்பத் தேர்வாக இருக்கின்றன. 

அவ்வளவுதான்.

Previous Post

பிள்ளைக் கனியமுதே

Next Post

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

சீனு ராமசாமி

சீனு ராமசாமி

தேசிய விருது பெற்ற திரைக்கலைஞர். கவிதை, கட்டுரை என இலக்கிய உலகிலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

Next Post
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. - 1

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Amma Immurai Calendarai Paarkkavillai

அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை

October 2, 2026
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

October 2, 2026
Panpaattu Tharkolai

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

October 2, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 2, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

0
Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

0
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

0
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

0
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

October 2, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 2, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ் – 1 (18)
  • இதழ்கள் (18)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (2)
  • கவிதை (3)
  • கவிதை (4)
  • சிறுகதை (6)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (5)
  • தலையங்கம் (1)
  • தொடர் (3)
  • நேர்காணல் (1)
  • படைப்புகள் (12)
  • மொழிபெயர்ப்பு (1)
  • மொழிபெயர்ப்பு கவிதை (1)
  • மொழிபெயர்ப்பு சிறுகதை (1)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • காட்சியகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு