Friday, October 2, 2026
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 1

நோவா லைஸ் கவிதைகள்

நோவா லைஸ் By நோவா லைஸ்
2 weeks ago
In இதழ் – 1, இதழ்கள், கவிதை, கவிதை, படைப்புகள்
A A
0
Nova Lies Kavithaikal

1.

சாந்தத்தின் ஆழத்திலிருக்கும் ஓர் அசரீரி தான்

சின்னஞ்சிறு மனதிற்குள் எஞ்சியிருக்கும் ரணத்தை 

உணரச் செய்கிறது

ஏமாற்றும் இந்தத் திவ்விய 

வெளிச்சத்திலிருந்து 

அதை மறைக்க வேண்டும்

ஆராதனையின் பிராத்தனை தீபங்களைக் கடந்து

சற்று அப்பால் எரியும் 

ஒரு தீப்பந்தத்திற்குள் நுழைந்துவிட்டேன் 

யாருக்காக உருகிக் கொண்டிருந்தேன் என்பதையே மறந்து

2.

சிலந்தி வலையில் சிக்கிய இரையைப் போல 

நான் அன்பில் வீழ்கிறேன்

முதல் முத்தத்திற்குப் பிறகும்

நாம் ஒன்றாகக் கழித்த முதல் இரவுக்குப் பிறகும்

நம் முதல் சேர்க்கைக்குப் பிறகும் 

நான் தப்பிச்செல்ல முயல்வதில்லை

பயந்த இதயத்திற்கு அன்பு சிறிது அமைதியைத் தரும்

நாம் பாத்திரங்களை மாற்றிக்கொள்கிறோம்

நீ உன் தலையை என் நெஞ்சில் சாய்க்கிறாய் 

கிரேக்கப் புராணங்களிலிருந்து ஒரு கதையை 

உனக்குச் சொல்கிறேன் 

யாரையேனும் அவள் தொடும்போதெல்லாம் 

அவனது உடலில் ஏக்கத் தீ மூண்டெழும் 

ஒரு பேரழகியைப் பற்றிய கதை

ஒரு நீண்ட முத்தத்தில் மூழ்கி

நாம் எங்கே இருக்கிறோம்

யார் என்பதையே மறந்துபோகிறோம்

மீண்டும் பாத்திரங்களை மாற்றிக்கொள்கிறோம்

நான் ஒரு புகைப்பிடிப்பதை ஏற்றிவிட்டு 

என் தலையை உன் தொடைகளில் சாய்க்கிறேன்

சிக்கலான என் கூந்தலுக்குள் உன் விரல்களை ஓடவிடுகிறாய்

என் சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு

நீ சொல்ல நினைத்த கதையைக் கூறுவதை நிறுத்துகிறாய்

என் உதடுகளைக் கவ்விக்கொண்டு

நாம் இருவரும் சேர்ந்து அன்பின் 

அடுத்த சுழற்சியில் மூழ்குகிறோம்

அன்பு எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது

நான் என் ஏக்கத் தணிப்பைச் செய்ய முயல்கிறேன்

நீயோ அதை மீண்டும் மூட்டி விடுகிறாய்

3.

நீ ஒரு ஏமாற்றுக்காரி

உன் உண்மையான முகத்தோடு

நீ விழாக்களில் கலந்துகொண்டாய்

திரண்டிருந்த கூட்டத்திற்கு முன்னால்

உன் இயல்பை அப்படியே வெளிப்படுத்துவதையே

நீ தேர்வாகக் கொண்டாய்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

நீ எப்படி யோசித்தாயோ

அப்படியே பேசினாய்

எதை மறைத்திருக்க வேண்டுமோ

அதை வெளிச்சமிட்டுக் காட்டினாய்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

அனைவரும் ஒருவருக்கொருவர்

முதுகைக் காட்டிக்கொண்டிருந்த வேளையில்

உன்னைச் சுற்றியிருந்தவர்கள் மீது

உன் உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டினாய்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

அனைவரும் தங்களின் உணவை

விழுங்கிக்கொண்டிருந்த வேளையில்

நீ எழுதுகோலை ஏந்தி

கணக்குகளையும் கூட்டல் கழித்தல்களையும் போட்டாய்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

யாராவது ஒருவர்

உன்னைக் குறைத்து மதிப்பிட்ட

ஒவ்வொரு தருணத்திலும் நீ காயப்பட்டாய்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

இந்தக் கொடூரமான உலகத்தை எதிர்கொண்ட பிறகு

உனக்குத் தடிமனான தோல்கள்

முளைத்திருக்க வேண்டும்

நீ ஒரு ஏமாற்றுக்காரி

நீ தேனீயைப் போலக் கொட்டியிருக்க வேண்டும்

எறும்பைப் போல ஒளிந்துகொண்டிருக்க வேண்டும்

மலரைப் போல உன்னைப் பாதுகாத்திருக்க வேண்டும்

ஆனால் நீ ஒரு ஏமாற்றுக்காரி

4.

அவள் என்பது எங்கும் இருப்பவள்

..

அவள் தன் நிழலைத் தேய்த்துத் தேய்த்து

முற்றத்துச் செடிகளுக்கு

உரமாக்கினாள்.

அவள் உடல் கிடக்க வேண்டிய இடத்தில்

இப்போது

ஒரு பெரிய மௌனம்

அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கிறது.

அவள்

உடுத்தியிருந்த ஆடைகளை

ஒவ்வொன்றாக உரித்துப் பார்த்தபோது

அவற்றுக்குள்

அவளே இல்லை

வெறும்

கடல் மணலும் சிப்பிகளும் 

அலைகளின் இரைச்சலும்

புளியங்காய் மாங்காய் மற்றும் சாம்பல்

*

அவள் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வாள்

ஒவ்வொரு முறையும்

வேறொரு முகத்தோடு

வீட்டு வாசலில் வந்து நிற்பாள்.

அவள்

அடுப்படியில் அமர்ந்து

எரிக்கும் விறகுகள்

நேற்றைய செய்தித்தாள்களாக மாறி

எரிய மறுக்கின்றன.

அவள் உமிழ்ந்த எச்சில் தட்டு

வானில்

ஒரு கருப்புச் சூரியனாக மாறிக் கிடக்க

அப்பா

காலண்டர் தேதிகளைத் தின்று

பசியை ஆற்றிக்கொள்கிறார்.

*

ஒருவன் அவளை புகைப்படம் எடுத்தபோது

அவள்

கேமராவிற்குள் நுழைய மறுத்து

புகைப்படக்காரனின் 

கண்களுக்குள் ஒளிந்துகொண்டாள்.

இப்போது

அவன் பார்க்கும் திசையெல்லாம்

அவள்

ஆயிரம் முகங்களோடு அலைகிறாள்.

ஊர் முழுக்க

அவளுடைய அடையாள அட்டை

சிதறிக் கிடக்க

அதில் உள்ள புகைப்படத்தில் மட்டும்

அவள்

தன் முகத்தை

ஒரு கறுப்புத் துணியால் மறைத்துக்கொள்கிறாள்.

*

அவள் எப்போதும்

நேர்க்கோட்டில் நடப்பதே இல்லை

அவள் பாதம் படும் இடமெல்லாம்

பூமி

வளைந்து கொடுக்கிறது.

அவள்

தொட்டுச் சென்ற மரங்கள்

அடுத்த கனமே 

மனிதர்களாக மாறிப் பேசத் தொடங்குகின்றன.

அவள்

இறந்துவிட்டாள் என்று சொன்னார்கள்

ஆனால்

அவள் தையல் இயந்திரம்

யாரும் மிதிக்காமலே 

காலத்தையும் வெளியையும் 

சேர்த்துத் தைத்துக் கொண்டிருக்கிறது.

5.

புணர்தல் முடிந்ததும்

என் உடல் என்னை விட்டு பிரிகிறது

அது குளியலறைக்கு போகிறது

தண்ணீர் ஓடுகிறது

நான் காத்திருக்கிறேன்

அது திரும்பி வரும்போது

எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது 

என்று தெரிகிறது

ஆனால் எதுவும் அழியவில்லை

நான் கேட்கிறேன்

‘ஏன் இந்த வெறுமை?’

என் உடல் சொல்கிறது

‘நிரம்பியதால் தான்’

நான் புரிந்துகொள்கிறேன் 

மணல் கடிகாரத்தைத் திருப்பி வைக்கிறது ஆசை

கீழே விழுந்த காலம்

மீண்டும் மேலே இருந்து தொடங்குகிறது

*

அவன் என்னிடம் சொல்கிறான்

‘உன்னை நான் அனுபவிக்கிறேன்’

நான் கேட்கிறேன்

‘அனுபவிப்பது எதை?’

அவன் தடுமாறுகிறான் 

‘உன்னை’

நான் சொல்கிறேன்

‘உடலை அனுபவி

என்னை அனுபவிக்காதே’

அவன் கோபப்படுகிறான்

‘வித்தியாசம் என்ன?’

நான் சொல்கிறேன்

‘உடல் முடியும் போது

நான் ஆரம்பிக்கிறேன்’

*

அவன் என்னை பார்க்கிறான்

நான் அவனை பார்க்கிறேன்

இது பார்வைகளின் புணர்தல்

உடல்கள் தொடாமல்

தொடுகின்றன 

நாங்கள் நகராமல்

நகர்கிறோம்

ஒருவருக்குள் ஒருவர்

இறங்காமல் இறங்குகிறோம்

முடிந்த பின்

அவன் சொல்கிறான்

‘இது உடலுக்கு அப்பாற்பட்டது’

நான் சொல்கிறேன்

‘உடல்தான் அப்பாற்பட்டது’

நாங்கள் இருவரும் சிரிக்கிறோம் 

ஏனென்றால்

எதுவும் புரியவில்லை

ஆனால் எல்லாமும் நடந்துவிட்டது

*

காலையில் நான் எழும்போது

என் உடல் படுக்கையில் இருக்கிறது

அது சொல்கிறது

‘இன்னும் கொஞ்சம்’

நான் சொல்கிறேன்

‘போதும்’

அது கேட்கிறது

‘எதற்கு?’

நான் பதில் இல்லாமல்

எழுந்துகொள்கிறேன் 

பின்னர் மாலையில்

நான் சோர்வாக இருக்கிறேன்

என் உடல் கேட்கிறது

‘சொன்னேனே?’

நான் சொல்கிறேன்

‘உனக்கென்ன

என் சோர்வு உன்னுடையதல்ல’

அது சலிப்படைகிறது

‘உனக்குள் இருப்பதெல்லாம்

எனக்குள்ளும் தான்’

நான் யோசிக்கிறேன்

அது உண்மைதானா?

அல்லது

நான் ஏமாற்றப்படுகிறேனா?

எனக்கு தெரியவில்லை

ஆனால் நான் காத்திருக்கிறேன்

எப்போதும் காத்திருக்கிறேன்

கூண்டுக்குள் இருக்கும் பறவை

சிறகுகளை அசைக்கிறது 

கூண்டின் பாரத்தை

யார் சுமப்பது?

சுவரில் தொங்கும் வில்

நாண் இழுக்கப்படாத போதும்

அதன் வளைவு

தீராமல் இருக்கிறது

*

நான் தனியாக இருக்கிறேன்

என் உடல் என்னுடன் இல்லை

அது அவனுடன் இருக்கிறது

நான் காத்திருக்கிறேன்

காத்திருக்கிறேன்

அது திரும்பி வரும்போது

சோர்வாக இருக்கிறது

நான் கேட்கிறேன் ‘என்ன ஆச்சு?’

அது சொல்கிறது ‘ஒன்றுமில்லை

சில உடல்கள் சில உடல்களுடன் 

பேசிக்கொள்கின்றன

நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்’

நான் கேட்கிறேன் ‘என்ன பேச்சு?’

அது சொல்கிறது ‘நீ இல்லாத பேச்சு

நான் இல்லாத பேச்சு

உடல்களின் சொந்த மொழி’

நான் புரிந்துகொள்கிறேன்

சில நேரங்களில் உடல்கள்

நம்மை விட்டு

தனியாக பேசுகின்றன

*

இரவு முழுவதும்

நான் என் கைகளை

பார்த்துக்கொண்டிருக்கிறேன்

அவை எனக்கு

அன்னியமாகின்றன

*

Previous Post

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

Next Post

மொழியற்ற முகம்

நோவா லைஸ்

நோவா லைஸ்

இயற்பெயர் அப்துல்ஹை நௌசாட். இலங்கை கிழக்கு பகுதியின் அட்டாளச்சேனை எனும் ஊரைச் சேர்ந்தவர். 2014 முதல் முகநூலில் கவிதைகளை எழுதி வருகிறார். குவைத்தில் அச்சகத் துறையில் பணியாற்றி வருகிறார். ‘சிறிய புகைப்படத்தின் பின்குறிப்புகள்’ என்ற கவிதைத் தொகுப்பை எழுதியுள்ளார்.

Next Post
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Amma Immurai Calendarai Paarkkavillai

அம்மா இம்முறை காலண்டரைப் பார்க்கவில்லை

October 2, 2026
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

October 2, 2026
Panpaattu Tharkolai

பண்பாட்டுத் தற்கொலை: போருக்குப் பின்னரான ஈழத்து இலக்கியம்

October 2, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 2, 2026
Kaadhalin Thooram Pathinettu Mile

காதலின் தூரம் பதினெட்டு மைல்

0
Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

0
Mozhiyatra Mugam

மொழியற்ற முகம்

0
Indiyavil Dalit Cinema

இந்தியாவில் தலித் சினிமா

0
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026
Thodarottam

ஏன் எழுதுகிறேன்..

October 2, 2026
Pillai Kaniyamudhe

பிள்ளைக் கனியமுதே

October 2, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • இதழ் – 1 (18)
  • இதழ்கள் (18)
  • கட்டுரை (2)
  • கட்டுரை (2)
  • கவிதை (3)
  • கவிதை (4)
  • சிறுகதை (6)
  • சிறுகதை (1)
  • சிறுகதை (5)
  • தலையங்கம் (1)
  • தொடர் (3)
  • நேர்காணல் (1)
  • படைப்புகள் (12)
  • மொழிபெயர்ப்பு (1)
  • மொழிபெயர்ப்பு கவிதை (1)
  • மொழிபெயர்ப்பு சிறுகதை (1)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • பதிப்பகம்
  • காட்சியகம்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 2, 2026
Ingirundhu Thodangugiren-1

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 2, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு
      • கவிதை
      • கட்டுரை
      • சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • தொடர்கள்
  • ஆசிரியர் குழு
    • கவிஞர் கரிகாலன்
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • பாரதி ஆரோக்கியராஜ்
    • அசதா
  • தொடர்புக்கு