சமீபத்தியவை
டி. எம். ரகுராம்

டி. எம். ரகுராம்

கேரளாவில் உள்ள தலைச்சேரியில் 1954ல் பிறந்தார். வளர்ந்ததும் படித்ததும் சென்னையில். புதுவை ஜிப்மரிலிருந்து எம்.பி.பி.எஸ், வேலூர் சி.எம்.சி -யிலிருந்து மனநலமருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றார். கேரளத்தில் பெரிந்தல்மண்ணாவிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவப் பேராசிரியராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் எழுதி மொழிபெயர்க்கிறார். 8க்கும் மேற்பட்ட மலையாள நூல்களை தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். மொழிப்பெயர்ப்புக்காக திசை எட்டும் விருது, கோவை வாசகர் வட்ட விருது, பொள்ளாச்சி அ. மகாலிங்கம் மையம் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.

கல்பட்டா நாராயணன்  கவிதைகள்

கல்பட்டா நாராயணன் (பிறப்பு 1952)கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் கல்லூரியில் மலையாளம் பேராசிரியராகப் பணி புரிந்தார். கட்டுரையாளர், கவிஞர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர்....

மேலும் படிக்கDetails