சமீபத்தியவை
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

ஈமத்தீ

ஸ்ரீதர்பாரதி By ஸ்ரீதர்பாரதி
57 minutes ago
A A
0
Eemaththee

புரட்டாசி பிறந்தாலும் பிறந்தது பெருமாள்பட்டியின் ஒரு தலைக்கட்டில் இழவு விழுந்து விட்டது. 

முனியாண்டி டீக்கடையில் விடிஞ்சும் விடியாமல் பெருசுகள் ரெண்டு பேசிக் கொண்டிருந்தன. 

“அழகரு செத்துப் போனான்ம்லயா?” 

“எந்த அழக்காரப்பா?”

“நம்ம தருமாரு அண்ணேன் !”

“திருப்பரங்குன்றத்துல தியேட்டரு வச்சிருக்காருல அவரா?”

“ஆமப்பா.. ஆமாம்.. அவரேதேன் ..”

“என்னாப்பா சொக்மில்லாம இருந்தாரா?”

“இல்லையப்பா.. நல்லாத்தேன் இருந்துருக்காரு மனுஷன்.. பொசாய நெஞ்சுவலின்னு ஆஸ்பத்திரி போயிருக்காரு..  போன வழியிலயே கதை முடிஞ்சு போச்சு..”

பெருமாள்பட்டியில் மூன்று தலைக்கட்டில் முக்கிய வகையறா நாட்டாமை வகையறா. 

இறந்து போன அழகர் என்கிற அழகர்சாமியும் தருமர் என்கிற தருமராசாவும் நாட்டாமை வகையாராவின் வாரிசுகள். அழகரும் தருமரும் ஒண்ணுமண்ணாத்தான் இருந்தார்கள். பணம் தான் அவர்களை பிரித்துவிட்டது. 

இல்லை.. இல்லை.. பணம்.. நகை.. நிலம்.. இவைகளின் மீது பேராசை கொண்ட அழகரின் பொஞ்சாதி அன்னலட்சுமி தான் அவர்களை பிரித்துவிட்டாள்!

ஏற்கனவே அழகருக்கும் தருமருக்கும் பூர்வீக சொத்து கணிசமாக பதினைந்து ஏக்கர் பூமி, காரை வீடு, வீட்டடித் தோப்பு என்று எக்கச்சக்க சொத்து இருந்தது. 

அழகர் கல்யாணம் முடிச்ச எடம் பெரிய எடம். பொண்டாட்டி அன்னலட்சுமி கோடீஸ்வரி. அண்ணன் தம்பிகள் பைனான்ஸ் பார்ட்டிகள். ஆகவே புருஷனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கூட்டுக் குடும்பத்தைப் பிரித்து அழகரோடு திருப்பரங்குன்றத்துக்கு குடிபோய்விட்டாள். 

அழகரும் பைனான்ஸ் பண்ண ஆரம்பித்தார். வட்டி குட்டி போட்டது. சாக்குப்பையில் கட்டி வைக்கிற அளவுக்கு பணம் சேர்ந்தது. தியேட்டர், கல்யாண மண்டபம் என்று சொத்து மேல் சொத்து சேர்ந்தது. 

பத்து மணிக்கெல்லாம் ‘இமயம் சரிந்தது’ போஸ்டர்களும் பிளக்ஸ் பேனர்களும் திரும்பிய பக்கமெல்லாம் ஒட்டியும் கட்டியும் இருந்தன.  உசிலம்பட்டி, செக்காணம், கீழக்கூடி, சேடப்பட்டி, செல்லூர், பைக்கார என்று இழவுச்செய்தி காற்றில் மிதந்தது. வாடிப்பட்டி கொட்டுக்கும் வடக்கம்பட்டி வெட்டுக்கும் ஆள் பறந்தது. ரோசாப்பூ மாலைகள் குவிந்தன. பங்காளிகள் சொந்தங்கள் இழவு கேட்க வந்த வண்ணம் இருந்தார்கள். 

கண்ணாடிப் பேழைக்குள் அழகர், மாப்பிள்ளை போல பட்டு வெட்டி சட்டையில் கண் மூடி கால் நீட்டிக் கிடந்தார். அழகரின் இரண்டு மகன்களும் வாசலில் வணங்கி நின்றார்கள்.  அன்னலட்சுமி அழுது ஓய்ந்திருந்தாள். புருஷன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

கருமாத்தூர் ராசா-ராணி ஆட்டமும் பாட்டமும் பெருமாள்பட்டி மனதை வரை கேட்டது. வீட்டின் முன் ஷாமியானா பந்தல் போடப்பட்டு இருந்தது. பிளாஸ்டிக் சேர்களில் வந்த சனம் அமர்வதும் எழுவதுமாக இருந்தது. கூட்டமான கூட்டம். ஆனால் அழகரின் உடன்பிறப்பு தருமறை மட்டும் காணவில்லை. வீட்டிலும் இல்லை. காலையிலேயே வீட்டை விட்டு வெளியேறி இருந்தான். 

“எழவுக்கு  போன, வீட்டு வாசலுக்கு வந்துராத.. என்குட்டாவது போயிரு!” தருமர் பொண்டாட்டி மீனாட்சி ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தாள். தருமர் எதுவும் பேசவில்லை.  டீத்தண்ணி கூட குடிக்கவில்லை. 

அண்ணனின் நினைவுகள் மட்டும் மனசுக்குள் அலையடித்த படியே இருந்தது. பால்யம் முதலே அதிகம் காலம் கழித்தது அண்ணாணோடு தான். கல்யாணத்துக்கு முன்னாடி வரை எது கேட்டாலும் வாங்கித் தந்து விடுவார். சட்டைத் துணி, வாட்சு, செருப்பு மாசாமாசம் புதிதாக மாறிவிடும். புதுப் படம் ரிலீஸ் என்றால் புரோட்டா, கறிதோசைக்கும் சேர்த்து காசு கொடுத்து மதுரைக்கு அனுப்பி வைப்பார். 

அன்னலட்சுமி அடி எடுத்து வைத்தாள். கதையே மாறி விட்டது. அம்புட்டு செல்வாக்கு இருந்தும், அழகரின் ஆததாளைக் கூட வீட்டில் அண்டவிட வில்லை. கடைசி வரை தருமர் வீட்டிலேயே காலங்கழித்து செத்துப் போனாள் கிழவி. 

தன் சொந்த பந்தங்கள் மட்டுமே தன் ஆஸ்திகளை அனுபவிக்க வேண்டும். மற்றவர்களை வேலைக்காரர்களைப் போலவே உபயோகப் படுத்திக் கொள்வாள். 

விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த தருமர் ரொம்பவே நொடித்துப் போனான். மகள் கல்யாணத்துக்கு பணம் கேட்டு அண்ணனிடம் போனான். 

“அண்ணே.. புள்ளைக்கி மாப்ள பாத்துருக்கேன்! மாப்ள திருநகர்ல தான்… செல்போன் கடை வச்சிருக்காப்ல! நகை நட்டு வாங்கிப் போடணும்! கல்யாணச் செலவு எல்லாம் சேர்த்து அஞ்சாறு லட்சம் தேவை.. ஆறு மாத்தைல ஒரு போராட்டு போராட்டித் தந்துர்றேன்!”

“சரிப்பா.. அதுக்கென்ன? வாங்கிக்க! மதனிய ஒரு கலந்துகிடுறேன்.. ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்! இல்லன்னா.. அவ சாமி ஆட்டம் ஆடிப்புடுவா..!”     

நாலு நாள் கழித்து பணம் கிடைத்தது. கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஓடிவிட்டது.  தருமரால் பணம் புரட்ட முடியவில்லை. செலவு மேல் செலவு வந்தது. அண்ணனைப் பார்க்கவே தயக்கம். நாள் நகர்ந்து கொண்டே இருந்தது. மாதக்கணக்கில் ஆகிவிட்டது. 

ஒருநாள் ஊர் விசேஷத்துக்கு வந்த அன்னலட்சுமி வீட்டு வாசலில் நின்று அசிங்கப்  படுத்த ஆரம்பித்து விட்டாள்! 

“என்னா சொல்லி காசு வாங்குன? ஆங்.. ஒரு ரூவாயா? ரெண்டு ரூவாயா? ஆறு லட்சத்துக்கு வட்டி என்னாச்சு? அசலும் வரல.. வட்டியும் வரல.. சோத்துல உப்பு போட்டு தான திங்கற?”

மீனாட்சிக்கு பழியாக கோவம் வந்து விட்டது. 

“இந்தா.. கொடுத்த காஸா வாங்கிக்கோ! தேவையில்லாம வார்த்தைய விடாத! அக்கம் பக்கம் என்ன நெனப்பாக? ஏதோ கஷ்டத்துல வாங்கிட்டோம்! இல்லைன்னா சொல்றோம்!”

“ஒரு மாத்தையில ஓங்காச வாங்கிக்க! இனிமே பட்டு உங்களுக்கும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒட்டுமில்ல.. ஒறவுமில்ல! உங்க வாசப்படிய நாங்க மிதிக்க மாட்டோம்.. எங்க வாசப்படிய நீங்க மிதிக்க வேணாம்!” என கொட்டித் தீர்த்து விட்டாள். 

தருமருக்கு மதனி மேல் கோபப்படவும் முடியவில்லை, அதே நேரம் ரோசப் படாமலும் இருக்க முடியவில்லை. 

ஒரு வழியாக வீட்டடியை விற்று பணத்தை செட்டில் பண்ணி விட்டான். எட்டு வருடங்கள் உருண்டவடி விட்டது. அண்ணன் தம்பி பார்த்துக் கொள்வதும் பேசிக் கொள்வதும் அரிதாகி விட்டது. 

நாலு வருஷம் முந்தி உசிலம்பட்டி விசேஷத்தில் பார்த்து பேச நேர்ந்தது. 

“டேய் .. தருமா.. நல்லாருக்கியா?”

‘வீட்டுப் பக்கம் வரவே மாட்டேங்குற?”

“ஓ மதனி பேசுனதுக்கு நான் என்னடா பண்ணுவேன்?”

“தியேட்டரா பாத்துக்க பொறுப்பான ஆளில்ல!”

“நாளைக்கி வீட்டுக்கு வா!”

அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத தருமர், “ம்..” என்று தலையை மட்டும் ஆட்டினானே தவிர அழகரை அதன் பிறகு பார்க்கவே இல்லை. 

ஜன் .. ஜன் .. ஜன் .. ஜன் .. 

ஜன்.. ஜன் .. ஜன் .. ஜன் .. 

கொட்டுச் சத்தத்தில் திசைகள் அதிர்ந்தது. அழகரின் மகன்களும் பங்காளிகளும் நீர் மாலை எடுத்து வந்தார்கள். வீட்டில் செய்யும் சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. 

சுடுகாட்டுக்குச் செல்ல மலர் மாலைகளால் சோடிக்கப்பட்டுக் கொண்டிருந்தது சொர்க்க ரதம். 

தருமர் வீட்டிலிருந்து இதுவரைக்கும் யாரும் வரவில்லை. 

“ஆயிரம் இருந்தாலும் அண்ணன் இல்லையா? எங்கயாப் போனான் இந்த தருமரு?”

“கூடப் பொறந்த ஒரே பொறப்பு.. அவன் தானப்பா முன்னுக்க நிக்கணும்.” பங்காளிகள் ஆளுக்கு ஆள் நியாயம் பேசினார்கள். இரண்டு இரண்டாக பிரிந்து ஆட்கள் திசைக் கொன்றாக தருமரை கூட்டி வரப் போனார்கள். 

இறுதி யாத்திரைக்கு தயாராகிவிட்டார் அழகர். 

“வீடுவரை உறவு.. 

வீதிவரை மனைவி.. 

காடு வரை பிள்ளை.. 

கடைசி வரை யாரோ?” அரைக் குழாயில் ஒலிக்கத் துவங்கி விட்டது. 

முச்சந்தியோடு கோடித் துணி போர்த்தி அண்ணாலட்சுமியை அழைத்துப் போனார்கள். 

அழகரின் மகன்கள் காரில் வர, சொர்க்க ரதத்தில் புறப்பட்டார் அழகர். 

ஜன் .. ஜன் .. ஜன் .. ஜன் .. 

போதை ஆசாமிகள் ஆடிக் கொண்டே வந்தார்கள். டூவீலர்களிலும் நடந்தும் ஆட்கள் பின்னே வந்தார்கள். 

சுடுகாட்டில் தக்கன மேடை தயாராகிக் கொண்டிருந்தது. மூன்று கிலோ மூட்டர் யாத்திரை முடிந்தது. சுடுகாட்டு சிப்பந்திகள் வேலைகளை ஆரம்பித்திருந்தார்கள். 

அழகரின் கட்டுக்கள் அவிழக்கப் பட்டன. கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை அவிழ்த்து மாகங்களிடம் தந்தார்கள். கைகளில் ஒன்றுமில்லை. இடுப்பில் இருந்த அண்ணாக் கொடி அறுக்கப்பட்டது. உடம்பின் மேல் எருவாட்டிகள் அடுக்கப் பட்டது. பெரிய மகன், “ப்பா .. ப்பா ..” என்று பெருங்குரலெடுத்து அழுதான். 

“கடைசியா மோகம் பார்க்குரவங்க பார்த்துக்கோங்க !”  

குரல் கேட்டது தான் தாமதம். கூட்டத்தை விளக்கிக் கொண்டு தலையில் அடித்தபடி வந்து விழுந்தான் தருமர். “அண்ணே.. .. ண்ணே .. . ண்.. . ணே..”

அழகரின் சின்ன மகன் குடமுடைத்து கொள்ளி வைக்க, தருமரோடு சேர்ந்து மேலெழுந்து அழுதது ஈமத்தீ. 

Previous Post

பாப்கார்ன்

Next Post

பாவ்

ஸ்ரீதர்பாரதி

ஸ்ரீதர்பாரதி

நவீன தமிழ் இலக்கிய சூழலில் கவிதை சிறுகதை என தொடர்ச்சியாக இயங்கி வருபவர். சிறு பத்திரிகைகள் மற்றும் வெகுஜன இதழ்களில் இவர் தம் படைப்புகள் வெளியாகியுள்ளன. படைப்புகளுக்காக வடசென்னை தமிழ் சங்க விருது, தமிழ் நாடு அறிவியல் இயக்கவிருது, திருப்பூர் முத்தமிழ் சங்க விருது, கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவுப்பரிசு ஆகியவற்றை பெற்றவர்.

Next Post
Paav

பாவ்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (46)
  • படைப்புகள் (42)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு