சமீபத்தியவை
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

ந.பெரியசாமி கவிதைகள்

ந பெரியசாமி By ந பெரியசாமி
2 hours ago
A A
0
Na Periyasamy Kavithaigal

1.

அது ஒன்றும்
பிரதான பிழையில்லை
எளிதினும் எளிய மறுப்புதான்.

புதிய ஆடையின் அழகு காட்டுவாய்
மாற்றிய தோடுகளை
சிமிட்டலில் நடனங்கொள்ளச்
செய்வாய்
பிடித்த பாடலின்
வரிகளை முழுகி
பிடித்த வரிகளை கேட்பதென
கேட்காத
எதிர்பாராத கணங்களில்
தானாக தோன்றி
சைகையில்
மொழியில்
தித்திப்பு மழையை பெய்விப்பாய்.

வெட்கை மிகுந்த இரவு
தாகம் உடலை
வறண்டு போகச் செய்தது
உன் பார்வையின் சொட்டுகள்
நதியாகி குளிர்விக்கும்
வறண்ட ரோகம்
இறக்கைகளாகி
பறத்தலில் வானை எட்டச் செய்யும்
எனவேதான் மன்றாடினேன்
நிமிடநேர வீடியோ அழைப்பிற்காக.

உன் மறுப்பின் காரணமறியாது
விழித்திருந்த இரவின் வெப்பம் பொசுக்கிய
நெகிழியானேன்.

2.

மண்பானை அடைகாக்கும்
நீரின் குளிர்ச்சி.

ஓடையின் மணலில் படிந்த
ஓடிய நீர்த்தடம்

மலை உச்சியில் அமர
கனியச் செய்யும் காற்று

பேருந்தில் அழைத்ததும்
மடி அமரும் குழந்தை

இருக்கையில் இணையாக
வந்தமரும் புதியவள்

தேநீரில் மிதக்கும்
டிக்காசன் நிலவு

துளிர்ப்பின் முண்டுதலில் வெடிப்புறும் நிலம்

இன்னும் இன்னுமென
நீளும் அலைவுகளை
உருவாக்கியபடியே இருக்கிறது
அணைப்பில் பிறக்கும்
ஒற்றை முத்தம்
*

Previous Post

சாதிக் கதைகளின் எல்லையை விரிக்கும் ‘பறைச்சி பெற்ற பன்னிரு குலம்’

Next Post

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

ந பெரியசாமி

ந பெரியசாமி

ந. பெரியசாமி, பெரம்பலூர் மாவட்டம் பசும்பலூரில் நடராஜன், பூங்காவணம் இணையருக்கு மார்ச் 14, 1971-ல் பிறந்தார். 1990-ல் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 2004-ல் முதல் கவிதைத்தொகுப்பான 'நதிச்சிறை' வெளிவந்தது. ஐந்து கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து கவிதைகள், நூல் விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். 'மொழியின் நிழல்' என்ற கட்டுரைத்தொகுப்பு வெளியிட்டுள்ளார். 2021-ல் 'கடைசி பெஞ்ச்' என்ற இளையோருக்கான இணைய கவிதை தொகுப்பு வெளிவந்தது. பின்னர் அச்சிலும் வந்துள்ளது. ஆங்கிலத்தில் மலர்விழியும், தெலுங்கில் ரகுபதியும் இத்தொகுப்பை மொழியாக்கம் செய்துள்ளனர்.

Next Post
Poovithazh Umesh Kavithaigal

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (46)
  • படைப்புகள் (42)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு