சமீபத்தியவை
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

ஆண்வாரிசு

கந்தசாமி சித்தையன் By கந்தசாமி சித்தையன்
1 hour ago
A A
0
Aan Varisu

பாலனுக்கு மூன்று ஆண்பிள்ளைகள். பெரியவனுக்கு பத்து வயது,மற்ற இருவரும் அடுத்தடுத்து இரண்டு வயது இளையவர்கள். கிணறு வெட்டும் வேலை, மரம் வெட்டும் வேலை, மாங்காய் பருவம் வந்தால் கிருஷ்ணகிரி சென்று , மாங்காய்களை மண்டிகளில் இருந்து இங்கு பிடித்து வந்து கொட்டி அவனும் அவன் மனைவி கற்பகமும் விற்பார்கள். அவனுக்கும் அவன் மனைவிக்கும் எப்போதும் குணப்பொருத்தம் அமையாது. பாம்பும் கீரியும்போல்தான். அவன் கிலோவிற்கு ஒரு மாம்பழம் சேர்த்துப் போட்டால் அவன் மனைவி எரிந்து விழுவாள். “இப்படியே வித்தா மொதுலு தேறாது”என்பாள். அன்றைக்கு விற்றதுபோக மீதி மாங்காய்களை தங்கள் குடிசையில் கூடையில் கொண்டுவந்து கொட்டுவார்கள். மகன்கள் மூவரும் கொட்டிக்கிடக்கும் மாங்காய்களை ஆளுக்கு ஒவ்வொன்றாக எடுத்துக் கடிப்பார்கள்.

அவர்களுக்கு மாங்காய்ப் பருவம் முடியும் வரையில் வேறு எந்தத் தீனியும் கிடையாது. வாரத்தில் ஏதாவது ஒருநாள் குடிக்கும் பழக்கம் பாலனுக்கு உண்டு,அப்போதுதான் அவனிடம் இருக்கும் அரக்க குணம் வெளிப்படும், கற்பகத்தை போட்டு மிதிப்பான். பிள்ளைகள் மூவரும் கூடடைந்த பறவை போல ஒரு மூலையில் ஓருவர் மீது ஒருவர் நெருக்கி குறுகி இருப்பார்கள்.

“ஏண்டா ஆளுக்காரா கட்டியத்தினி எதுக்குடா இப்படி அட்டூழியம் பண்ணி ஆடுற”என்பாள்.

“தேவிடியா ஒன்ன கட்டித்தாண்டி நா அழிஞ்சி போனேன்” என்பான்.

அடி பொறுக்க முடியாமல் கற்பகம் “இல்லனா மகாராசனா பொழச்சி இருப்பபாரு,பேண்டா கல்ல தொடச்சிக்கிட்டு சூத்துக் கழுவாத இருந்த ஒன்ன கட்டினேன் பாரு போடா குடிகாரா”என்பாள்.

“ஓப்பன் போட்ட ரெட்ட சுத்து தங்கக்கொத்துச் சங்கிலிய வித்துக் குடிச்சிப்புட்டேன் பாரு”

கற்பகத்தின் நீண்ட கூந்தலை இழுத்து விட்டு வாசலுக்கு வந்து முதுகில் ஓங்கி ஐந்து அடி அடித்தான்.

கண்ணியில் மாட்டிய அணில்போல அவளால் திமிற முடியவில்லை, மாடுபோலக் கத்தினாள்,அக்கம் பக்கத்தினர் யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை, வாரம் ஆனால் நடப்பதுதானே அனைவரும் உறங்கிக்கொண்டும் ஒரு சிலர் சத்தத்தில் விழித்துக்கொண்டும் இவர்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று புரண்டு படுத்தார்கள்.

அம்மா அழுவதைப் பார்த்துச் சகிக்க முடியாமல் இருந்த பெரியவன்தான்,”அம்மாவ அடிக்காத, அம்மாவ அடிக்காத”என்று சொல்லிக்கொண்டு வந்து நின்றான். அவனைப்பார்த்து மனம் இளகிய பாலன் கற்பகம் முடியைப் பிடித்து இருந்த தன் வலக்கையின் பிடியை விட்டான். பிடியில் மீண்டவள் ஒரு நரம்புப் பையினை எடுத்து இருந்த இரண்டு புடைவைகளையும் நிரப்பினாள். கற்பகத்தின் அருகே மகன்கள் மூவரும். “அம்மா போகாதம்மா” என்றார்கள். “டே தள்ளுங்கடா ஒங்க அப்பந்தான் நல்லவன், இருந்தா அவன் கூடவே இருங்கடா,இல்லனா என்கூட வாங்கடா”என்பாள். பெரியவனைத் தவிர மற்ற இருவருக்கும் பெரிதாக விவரம் தெரிவிவில்லை.

போதையில் சட்டையைக் கழட்டிப்போட்டு கட்டிலில் மல்லாக்கப் படுத்துக்கொண்டு இருந்த பாலன் “போங்காடா அவ கூடயே, ஒங்கள மூணு பேத்தியும் வித்துட்டு எவன் கூடவாச்சும் ஓடிப்போயிடுவா, நாளைக்கு கல்யாணம் பண்ணி ஒங்கள மாதிரியே மூனூ என்னா நாலு பய்யன பெப்பண்டா நானு”என்று அழுத்திச் சொல்லிவிட்டுத் தூங்கினான் பாலன்.

நடுச் சாமம் ஆனதால் கற்பகம் எங்கும் போகாமல் மாட்டுச்சாணம் பூசி மெழுகி இருந்த மண் தரையில் படுத்தாள். கற்பகம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அடி பொறுக்க முடியாமல் யாராவது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடுவாள், அவர்களுக்கு வேலை செய்துகொண்டு அங்கேயே ஒருவாரம் இருப்பாள், மகன்களை அப்போது பாலன் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வான். அந்த வாரம் அவன் குடிக்க மாட்டான், மகன்களுக்கு சமைத்துப் போடுவான்,கடைகளில் இருந்து உணவு திண்பண்டங்கள் வாங்கி வருவான் பிறகு பாலன் போய் சமாதானம் பேசி கற்பகத்தை அழைத்துக்கொண்டு வருவான். பாலன் குடித்தால்தான் இந்த அரக்க குணம்.

கற்பகத்திற்கு எப்போதுமே அரக்க குணம்தான். அவள் கோபித்துக்கொண்டு சென்ற நாட்களில் மகன்கள் பாலன் மீது அன்பாக இருப்பார்கள். தாய் இல்லாத இடத்ததைப் பாலன் நிரப்புவான். அவன் குடிப்பதற்கு முக்கிய காரணமே கற்பகம்தான். அடிக்கடி அவனைத் திட்டுவாள்,அவன் குடும்பத்தைப் பொறிந்து தள்ளுவாள், பாலன் குடும்பத்தில் நான்கு சகோதரர்கள். கடைசியாக ஒரு சகோதரி. பாலன் இரண்டாவது பிறந்தவன்,இவர்கள் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது அவர்கள் தந்தை இறந்த பிறகு அவனின் மூத்த அண்ணன்தான் குடும்பத்தைக் கரை சேர்த்தார்.

அவருக்கு நான்கு திருமணம் ஆகி நான்கும் விவாகரத்தில் முடிந்தது. கற்பகம் அவரை “நாலு பொண்டாட்டிக்காரன்”என்பாள். பாலனின் அம்மாவை “உங்க அம்மாளுக்கெல்லாம் சோறாக்கத் தெரிஞ்சா உங்க பொளப்பு ஏ இப்படி இருக்கு”என்பாள். அனைத்தையும் உள்வாங்கிக் கொண்ட பாலன் போதை ஏறினால் அடிவாங்கிய புலியாகப் பாய்வான். அப்படித்தான் அன்று பாய்ந்து ஓய்ந்து கிடந்தான்.
விடியற்காலை கோழிகள் ஒவ்வொன்றாகக் கூவியது. முதல் ஆளாக எழுந்து பாத்திரத்தை வறுக் வறுக்கெனத் தேய்த்துக் கொண்டிருந்த கற்பகம்,
“அந்த மூத்திரத்த குடிச்சிப்புட்டு என்ன ஏண்டா வந்து அடிக்கிற ஆளுக்கார,ஒங்க ஒம்மாளப் போயி அடிடா, இருக்குற மூணு போதாதுணு இப்ப கல்யாணம் பண்ணி பய்யன் பெக்குரானாம் தேவிடியாய பையன்”என்று இன்னும் கேட்க முடியாக வார்த்தைகளில் பேசினாள்.

போதை தெளிந்த அலுப்பில் தலைவலியோடு பாலன் சுருண்டு படுத்து கிடந்தான். அவன் போர்வையினைப் பிடிங்கி அவன் அருகே படித்திருந்த பிள்ளைகளின் தலைக்கு வைத்தாள். அவன் முதுகில் ஓங்கி ஒரு உதை கொடுத்தாள். எழுந்து முறைத்துவிட்டு மீண்டும் படுத்தான் பாலன். அவன் மீண்டும் போதை போடும் வரை கற்பகத்திடம் பயந்து கொண்டுதான் இருப்பான். போதை ஏறிவிட்டால் இத்தனை நாள் கற்பகம் அவனைப் பேசியதற்கு,பதிலடியாக பத்துரூபாய் வட்டி கொடுப்பது போல ஒரு வார்த்தைக்குப் பத்து வார்த்தை கேட்டுக் கூடவே அடியும் கொடுத்து, கற்பகம் வாங்கி வைத்திருக்கும் பாத்திரங்களைப் போட்டு உடைப்பான். அப்படி ஒருமுறை ஐந்துகுடம் நீர் பிடிக்கும் அளவுள்ள சிமெண்டால் செய்யப்பட்ட தாழியினைத் தூக்கிப் போட்டு உடைத்தான். அப்போது பெரியவன் மட்டுமே பிறந்து இருந்தான். தாழி உடைபடுவதைப் பார்த்த கற்பகம் மகனைத் தூக்கிக்கொண்டு ரோட்டுக்கு ஓடி நின்றிருந்த அரசு பேருந்தில் எறினாள்.

நடத்துனர் “எங்கம்மா போற?”என்றார்.

“எங்கயோ ஒண்ணு போறேன்”என்றாள்.

“பஸ் மேட்டூர் வரைக்கும் போகுது,எங்கன்னு சொன்னா எறக்கி விடுவேன்”

“மேட்டூர்லயே கொண்டு போயி விடு அங்க அணையில உளுந்து சாகுரேன்”

“அப்ப டிக்கெட் காசு கொடும்மா”

“காசசெல்லாம் என்கிட்ட கிடையாது”

“அப்ப ஏறங்குமா நீ” என்று நடத்துனர் சத்தமிட்டார்,பேருந்து எடுக்காமல் அப்படியே நின்றது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள், அருகே வீடுகளில் இருந்தவர்கள் என பத்துபேர் கூடி சமாதானம் செய்து கற்பகத்தை இறங்க வைத்தனர்,அன்னைக்கு ஊர் திண்ணைகளில் அதுதான் பேச்சு. எப்படியோ சண்டையிட்டுக்கொண்டு வாழ்க்கை நடத்தினாலும் அடுத்து இரண்டு ஆண்பிள்ளைகளை பெற்றாள் கற்பகம். ஊரில் கூட “கொத்துச்சாவலாக நின்னுக் கிட்டு பொழப்ப ஓட்டுராங்க இந்த பாலனும் கற்பகமும்”என்பார்கள். ஊரில் இளசுகள் இந்த ஜோடியைக் கண்டால் திருமணமே செய்து கொள்ளக்கூடாது என்று சிலர் எண்ணினார்கள்.

அந்த வருட மாங்காய் பருவத்தில் ஓரளவுக்கு வருமானம் கிடைத்தது,பிறகு இருவரும் ஜமக்காளாம் நெசவு நெய்வார்கள். சண்டை வாரம் ஒருமுறை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. பிள்ளைகள் மூவரும் நன்றாகப் படித்தார்கள். “குடி, சண்டன்னு இருந்தாலும்,ரேஷன் அரிசி சோத்தத் தின்னுட்டுக்கோட பாலமூட்டு பசங்க நல்லா படிக்குதுங்க”என்று ஊரில் பேசினார்கள். படிக்காமல் இருக்கும் தங்கள் பிள்ளைகளிடமும் அதைச் சொல்வார்கள்.

பாலனுக்கும் தன் மகன்கள் படிப்பது ஓர் கர்வம்தான்,மூன்றும் ஆணாக இருப்பது அவனுக்கு கூடுதல் கர்வம். ஊரிலே ஆண்வாரிசு இல்லாத குடும்பத்தினை அவன் மனைவியிடம் ஏளனமாக “மொட்டாப்போன குடும்பம்”என்பான். கற்பகம் அதற்கு “பொட்டப்பிள்ளைங்கன்னா என்னா கேவலமா?”என்பாள், “அதுக்கில்லடி பேர் சொல்ல ஒரு ஆண் வாரிசு வேணாமா?”

“என்னமோ அழியாதசொத்து வச்சி இருக்கிற மாதிரி பேசுற,பக்கத்துல இருக்குற அந்தப் பண்ணையார பாரு ஒத்தப் பொண்ணு போதுமுன்னு ஆபரேஷன் பண்ணிக்கிட்டாங்களாம்,அவுங்க சாதியெல்லாம் பாரு ஆணோ பொண்ணோ எதா இருந்தாலும் இப்பயெல்லாம் அவிங்க ஒண்ணுதான் வச்சிக்கிராங்க , அவுங்களுக்கு இல்லாத நெலமா? நாம்ப என்னமோ கொஞ்ச நெலத்த வச்சிக்கிட்டு ஆணுதான் வேணுமுன்னு இக்கிறோம்” என்றாள் கற்பகம்.

பெரியமகன் காவல் துறைக்கு தேர்வாகினான், குடும்ப வறுமையினைக் கொஞ்சம் விரட்டினான்,சின்ன மகன்கன் இருவரும் கல்லூரிப் படிப்பினை தொட்டார்கள்,ஊர் திருவிழாவில் மூவரும் அமர்ந்து பேசுவதைப் பார்த்தால் பாலன் பூரிப்படைவான்,பெரிய மகனின் அரசுப் பணியால் அந்த குடும்பத்தின் மரியாதை கொஞ்சம் கூடியது,தனிநபர் கடன் பெற்று இருந்த குடிசை வீட்டினை இடித்து சிறிய மெத்தை வீடு கட்டினான். அவனுக்குத் திருமண வயது நெருங்கிய போதும் பெண் பார்க்காமல் காலம் கடத்தினான் பாலன்.

பாலனைப்பார்த்து கற்பகம் “ஏண்டா பெருஞ்சோறு தின்னவனே வயசு இருபத்தி அஞ்சு ஆகப்போகுது,நீயெல்லாம் பத்தம்போதிலேயே கல்யாணம் பன்னிக்கல”என்றாள்.

சுயநல உள்ளத்தோடு பாலன், “பத்தம்போது என்னாடி நானெல்லாம் அறுபத்தி ஒன்பதிலும் பிள்ள பெப்பேன்,அதுவும் ஆண் பிள்ளையா பெப்பேன் எனக்கு பொறந்த பையன் முப்பதுல பிள்ள பெக்க மாட்டானா? இன்னும் அஞ்சு வருசம் ஆகட்டும் பெத்து வளக்கல, கொஞ்ச நாளு நமக்குதான் சம்பாதிச்சு போடட்டுமே!” என்றான்.

“ஓ வாயில அடப்பு வற, ஊருல சின்னதுங்களுக்கெல்லாம் சாவு வருது ஓ வாயிக்கு ஒண்ணு வந்து தொலய மாட்டேங்குதே, ஒனக்கு என்ன நல்லாதானே உருள கட்ட மாதிரி இக்குற,உழுந்தா கெடக்குற? உழச்சித் தின்னே, இந்த வயசுலியே பிள்ளைங்க பணத்துக்கு எதுக்கு இப்படி அலையுற”என்று கண்டிப்புச் செய்வாள் கற்பகம்.

வறுமைக் கடலை நீந்தி, குடும்பம் வளர்ச்சி எனும் கரையைக் கடக்கும்போது பேரலை வந்து அடிப்பதுபோல் அவர்கள் குடும்பத்தில் அந்த துர் சம்பவம் நடந்தது,ஊர் கிணற்றில் கடைசி இரு மகன்களும் தவறிவிழுந்து இறந்தார்கள். பாலனின் குடும்பம் சூன்யம் பிடித்தது போல இருண்டு கிடந்தது,புத்திர சோகம் பாலனைத் துவட்டி எடுத்தது ஒருவருடமாக கற்பகமும் பாலனும் வீட்டை விட்டு வெளிவராமல் இருந்தார்கள்,கெட்டது நடந்த வீட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சொந்தங்களின் வற்புறுத்தலினால்,பெரியவனுக்கு தூரத்துத் சொந்தத்தில் பெண் பார்த்துத் திருமணம் முடித்தார்கள்.

பாலன் பழைய மாதிரி இல்லை,துக்கம் அவன் கண்களில் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டுதான் இருந்தது. கற்பகத்திற்கு மகன்கள் நினைவு வந்தால் “பய்யன் பெப்பேன் பய்யன் பெப்பேன்னு வாழ மரம்மாதிரி வளந்து இருந்த இருந்த ரெண்டையும் கொன்னுப்புட்ட, ஒ வாயலதான் ஏ வவுத்தல பொறந்த ரெண்டையும் பறி கொடுத்து நிக்கிறேன்”தன் வயிற்றில் அடித்துக்கொண்டு பாலனிடம் சண்டையிடுவாள்.

பாலன் அமைதியாக இருப்பான். பெரியவனுக்கு முதலில் பெண்குழந்தை பிறந்தது, கற்பகத்தை விட பாலனுக்கு ஏமாற்றம். கற்பகத்திற்கு இரு மகன்கள் இழப்பிற்குப் பிறகு ஆண் குழந்தை மீதான பற்றுதல் அவளுக்குக் குறைந்துதான் இருந்தது,பாலன்தான் ஆண்வாரிசு மோகத்தில் மூழ்கி இருந்தான்.

இரண்டுவருடம் கழித்து மருமகள் கர்ப்பம் தரித்தாள், குலதெய்வம் பெரியாண்டிச்சிக்கு அம்மனுக்கு ஆடு வெட்டுவதாகவும், ஊர் முனியப்பனுக்குக் கோழி அறுப்பதாகவும்,மாரியம்மனுக்கு மகனின் ஒருமாத ஊதியத்தை உண்டியலில் போடுவதாகவும்,பழனிக்கு மொட்டை போடுவதாகவும், பாலன் ஆண் வாரிசிற்காக வேண்டாத கோவில் இல்லை வைக்காத வேண்டுதல் இல்லை,மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டின் வெளியில் பாலனும் கற்பகமும் தன் பெரிய மகனோடு பதட்டம் நிறைந்து அமர்ந்து இருந்தார்கள், பிரசவ வார்டின் கதவைத் திறந்த பெண் மருத்துவர் அவர்களைப்பார்த்து,

“பெண் குழந்தை பிறந்து இருக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணிடலாமா?” என்று கேட்டார்.
கற்பகத்திற்கும் அவன் மகனுக்கும் சின்ன ஏமாற்றம் இருந்தாலும் ஏற்றுக்கொண்டார்கள். மருத்துவமனை இடிந்து அவன் மீது விழுந்தது போல பாலன்தான் தலை மீது கைவைத்துக்கொண்டு அழுதான்
தன் தோளில் உள்ள துண்டினால் கண்ணீரைத் துடைத்தவாரே “போச்சே ஏ குடும்பத்துக்கு ஆண்வாரிசு இல்லாம போச்சே” சாவு விழுந்த வீடு போல கத்தினான்.

கற்பகத்தைப் பார்த்துச் சத்தமாக “ஏ ஆபரேஷன் பண்ண விடாத, இன்னும் ஒன்னு வரைக்கும் பொறுத்து பார்ப்போம்,நாம்ப எல்லாம் மூணு பெக்கல!”என்றான்.

தான் இரு மகன்களைப் பெற்றுப் பட்டதுபோதும் என்று நினைத்த கற்பகம் மகனைப்பார்த்து “ கண்ணு நீ ஓண்ணும் வருத்தப்படாத பக்கத்து ஊர்ல முத்தய்யன் வாத்தியாருக்கு ஒரு பய்யன் ஒரு பொண்ணு,பய்யனுக்கு படிப்பு வரல அதனால நிலத்த பாத்துக்க விட்டுட்டாரு,அவரு பொண்ணு நல்லா படிச்சு இன்னைக்கு பெங்களூர்ல கம்யூட்டர் கம்பெனியில வேலையில இருக்குது மாசம் ரண்டு லட்சம் சம்பளமாம்,பய்யன் சொத்து கிடைச்சதும் பெத்தவங்கள கண்டுக்கறதுயில்ல,இன்னைக்கு பொண்ணுதான் குடும்பத்த கூட்டிக்கிட்டு இங்கேயே வந்து கம்யூட்டர்ல வேலையும் செஞ்சிக்கிட்டு,அப்பா அம்மாவையும் அப்படி பாத்துக்குது,இன்னைக்கெல்லாம் எந்த பசங்க பெத்தவங்கள பாத்துக்குராங்க, நீ போயி கையெழுத்து போடு”என்றாள்.

போதை போடாமாலே அரக்கம் குணம்ஏறி பழைய பாலனாக “ஏண்டி ஏ குடும்பம் மொட்டாப் போகனுமா?”என்றான்.

“நீதான் அறுபத்தி ஒன்பதிலும் பய்யன் பெப்பிய? இப்ப என்னா அம்பதுதானே ஆகுது எவ கூடியாவது படுத்துப் பெத்துக்கோ,ஏம் பய்யன விடு,சரியா?”என்றாள் கற்பகம்.

பாலன் உடம்பில் இருந்த சின்ன வலுவும் கற்பகத்தின் கேள்வியால் கரைந்தது.

Previous Post

ஒத்தைக்காதன்

Next Post

பத்துநாட்கள்

கந்தசாமி சித்தையன்

கந்தசாமி சித்தையன்

கந்தசாமி சித்தையன்- சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தெத்திகிரிபட்டி இவரின் பூர்வீக கிராமம். அரசுபள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவரின் முதல் படைப்பு சேலம் மேற்கு பகுதியில் குலதெய்வ விழாவாக கொண்டாடப்படும் தெவவிழாவினை தெவம் என்ற பெயரில் நாவலாக எழுதியுள்ளார். அந்நாவல் யாவரும் வெளியீடாக கடந்த 2025ம் ஆண்டு வெளிவந்தது. இவரது சிறுகதைகள் அந்தி மழை அச்சிதழ், யாவரும்,நடுகல் போன்ற மின்னிதழ்களில் வெளிவந்துள்ளது.

Next Post
Paththu Natkal

பத்துநாட்கள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (46)
  • படைப்புகள் (42)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு