சமீபத்தியவை
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

இலக்கியத்தின் மையப் பொருளாகும் நவீனகாலப் பூசல்கள்

கரிகாலன் By கரிகாலன்
2 hours ago
A A
0
Editorial Issue 2

‘களம் புதிது’  ( அக்டோபர் ) முதல் இதழுக்குக் கிடைத்திருக்கும் ஏகோபித்த ஆதரவு மன நிறைவைத் தருகிறது. களம் புதிது சமூகத்தில் உருவாக்கியிருக்கும் நற்பெயர், படைப்பாளிகளின் சிறந்த பங்களிப்பு, இரண்டும் இவ்வெற்றியைச் சாத்தியமாக்கி உள்ளது.  ஆழமான, நவீனச் சிந்தனைகளுக்கான தாகம்  குறையவில்லை என்பது நிருபணமாகி இருக்கிறது.

​இதழுக்கு தார்மீக ஆதரவளித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் மற்றும் இதழைத் தீவிரமாக வாசித்துத் தம் மேலான கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் களம் புதிது ஆசிரியர் குழு தன் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆதரவே நவம்பர் இதழை மேலும் வீரியத்துடனும் புத்துணர்வுடனும் கொண்டுவருவதற்கான ஊக்கத்தை  அளித்திருக்கிறது.

​நவம்பர் இதழில்  ஆங்கிலப் படைப்புகளுக்கு என்று  தனியாக ஒரு வெளியை உருவாக்கியிருக்கிறோம். இது பெயரளவில் உலகமயமாக்கல் அடையாளத்திற்காக செய்யப்பட்ட மாற்றம் அன்று. மாறாக, இன்றைய நவீனச் சூழலில் இருமொழிப் பயன்பாட்டின் (Bilingual Approach) அரசியல் மற்றும் கலாச்சாரத் தேவை மிக முக்கியமானது. தமிழ் இலக்கிய உலகம் தன் தனித்துவமான மரபையும் நவீனப் போக்குகளையும் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்கும் நிலையிலிருந்து வெளியேற வேண்டும் . பிராந்திய மொழிகளின் சிறந்த படைப்புகள் ஆங்கிலம் வழியே சர்வதேசத் தளத்திற்கு எடுத்துச் செல்லவதற்கான ஒரு முயற்சியாக இது அமையும்.  

இன்றைய  இளம் தலைமுறையினர் இருமொழிச் சூழலிலேயே சிந்தித்துச் செயல்படுகிறார்கள். அவர்களின் வாசிப்பு மற்றும் வெளிப்பாட்டு முறைக்கு வடிவம் கொடுக்க இவ்விருமொழித் தளம் இன்றியமையாதது. உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கும், தமிழ் மரபின் ஆழத்தை அறிய விரும்பும் பிற மொழியினருக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான இலக்கியப் பரிமாற்றத்தை உருவாக்க களம் புதிது இந்த அடியை முன்வைக்கிறது.

​​மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல. அது செயலூக்கம் கொண்ட ஒரு தொடர் நடைமுறை. களம் புதிது படைப்புகளைச் சேகரித்து வெளியிடும் டிஜிட்டல் பேழையாக இருக்க விரும்பவில்லை. நவீன இலக்கியத்தில் வடிவ ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் தொடர்ந்து புதுமைகளையும் மாற்றங்களையும் நிகழ்த்துவது இதன்  நோக்கங்களுள் ஒன்று. 

​பாரம்பரிய இலக்கியக் கோட்பாடுகளைக் கேள்விக்குட்படுத்துவதும், புதிய தொழில்நுட்பக் காலத்தில் உருவாகும் டிஜிட்டல் பண்பாடு, செயற்கை நுண்ணறிவு, மனித உறவுகளின் சிக்கல்கள், சூழலியல் நெருக்கடிகள் போன்ற நவீனப் பூசல்களை இலக்கியத்தின் மையப் பொருளாக மாற்றுவதும் நமது கடமையாகும். தேங்கிப்போகும் எந்தவொரு அமைப்பும் காலப்போக்கில் மறக்கப்படும். எனவே, தன் வடிவத்தையும் பார்வையையும் புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான் களம் புதிது இதழின் அடையாளமாக இருக்கும்.

​​இன்றைய உலக அரசியல் சூழலை உற்று நோக்குபவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாக விளங்கும். மாணவர் போராட்டங்கள் மீண்டும் உலக அரசியலின் அசைக்க முடியாத சக்தியாக மாறியிருக்கின்றன. சமீபகாலமாக ஐரோப்பாவிலும், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலும், ஆசிய நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் வெடித்துள்ள மாணவர் கொந்தளிப்புகள் வெறும் வகுப்பறைப் புகார்கள் அல்ல. அவை உலகளாவிய அதிகார மையங்கள், போர்கள், பொருளாதாரச் சுரண்டல்கள், காலநிலை மாற்றம் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றத்தின் வெளிப்பாடாகும். 

சமீபத்தில் உலக நாடுகளில் நடந்த பொதுத்தேர்தல்களில், மாணவர்களும் இளைஞர்களும் திரண்ட விதம் பாரம்பரிய அரசியல் கணக்குகளைத் தலைகீழாக மாற்றியுள்ளது. தேர்தல்களில் வேட்பாளர்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாணவர் அமைப்புகளின் குரல் மாறியுள்ளது. சர்வதேசக் கொள்கைகள், போர்களுக்கான நிதியுதவி, கல்விக்கடன் சுமை மற்றும் காலநிலை அரசியல் போன்றவை இன்றைக்குத் தேர்தல் பிரச்சாரங்களின் முதன்மைப் பொருளாக மாறியதற்குக் காரணம் மாணவர்களின் வீதிப் போராட்டங்களே.

ஆளும் வர்க்கங்கள் மாணவர் போராட்டங்களை அடக்குமுறையாலும், தணிக்கையாலும் ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தபோது, வாக்குப்பெட்டிகளின் வழியே இளைஞர்கள் தங்களின் பதிலை மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

​​உலகம் இந்த அளவிற்கு அரசியல் கொந்தளிப்புகளையும், சமூகப் புயல்களையும் சந்திக்கிற போது, ஓர் இலக்கியவாதி அல்லது சிந்தனையாளர் எங்கே நிற்க வேண்டும்? வசதியான இடத்தில் அமர்ந்து அழகியலை  மட்டும் பேசுவது இனி இலக்கியமாகாது. 

இலக்கியவாதிகள் சமூக மாற்றங்களிலிருந்து விலகி நிற்கும் வேடிக்கை பார்ப்பவர்கள் அல்லர். கொந்தளிக்கும் மாணவர் போராட்டங்களின் பின்னணியில் இருக்கும் மனிதத் துயரம், அறச்சீற்றம், மற்றும் அதிகாரத்தின் வன்முறை ஆகியவற்றை ஆவணப்படுத்துவதும், அதற்கு இலக்கிய வடிவம் கொடுப்பதுமே  இலக்கியவாதிகளின்  தலையாய கடமையாக இருக்க முடிரும்.

ஒடுக்கப்படுபவர்கள் மற்றும் நீதிக்காகப் போராடுபவர்களின் பக்கமே அறம் நிற்கிறது.  மாணவர் போராட்டங்களை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை என்ற ஆளும் வர்க்கத்தின் பார்வையில் அணுகாமல், அதன் ஆழமான வரலாற்று மற்றும் சமூகப் பின்னணியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதேவேளை,  இலக்கியம் என்பது வெறும் அரசியல் துண்டுப் பிரசுரம் அல்ல. அது மனித மனதின் ஆழமான உணர்வுகளோடு அரசியலைப் பிணைப்பது. மாணவர் போராட்டங்கள் எழுப்பும் கேள்விகளை, மனித இருப்பின் அடிப்படைக் கேள்விகளாக மாற்றி வாசிக்கும் தேவை  உருவாகியிருக்கிறது. களம் புதிது நவம்பர் இதழ் இத்தகு ஆழமான விவாதங்களுக்கும், இருமொழிப் படைப்புகளுக்கும், உலகளாவிய அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் உரையாடல்களுக்கும் களம் அமைத்துத் தந்திருக்கிறது. பயனுறக.

Previous Post

ஏன் எழுதுகிறேன்… – கவிஞர் சுபி

Next Post

ஒத்தைக்காதன்

கரிகாலன்

கரிகாலன்

நவீன தமிழ்க் கவிஞர்கள் வரிசையில் முக்கியமான கவிஞராக அறியப்படுபவர். பின் நவீனத்துவம் சார்ந்து புனைவிலக்கியத்திலும் தடம் பதித்தவர். இவரது கவிதைகள் அதிகார எதிர்ப்பை மையச் சரடாகக் கொண்டவை. தொன்மமும், புனைவும், மர்மமும் மிகுந்த இவரது கவிதைகள் தமிழ்க் கவிதை மரபின் தொடர்ச்சியும், மேலைத்தேயக் கவிதைகளின் புதுமையும் இணையப் பெற்றவை. களம் புதிது அமைப்பினை நிறுவி, அதன்மூலம் இலக்கிய பரப்பில் தமிழின் பன்மைத்துவத்தை வளர்த்தெடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். புதுமையான இலக்கிய முயற்சிகளை அங்கீகரித்து ஊக்கப்படுத்தியும் வருகிறார்.

Next Post
Othaikkathan

ஒத்தைக்காதன்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (46)
  • படைப்புகள் (42)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு