சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

கீதிர் கவிதைகள்

களம் புதிது By களம் புதிது
5 hours ago
A A
0
Keethir Kavithaigal

1.
இப்படித்தான் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
இப்படித்தான் உன்னையும் காதலிக்க விரும்புகிறேன்
எளிமையாக
சாதாரண மக்களின் காதலைப் போல
கவித்துவம் எதுவுமின்றி

கொழுப்பு நிறைந்த இந்த “காதலிக்கிறேன்” என்ற சொற்களை
என் தாய் எனக்குச் சொத்தாக விட்டுச் சென்றாள்;
ஒரு உருளைக்கிழங்கு வயலைப் போல

அந்தச் சொற்களின் மூட்டைகளை
என் மார்பின் தராசில் வைத்தாள்
இடது தட்டு தாழ்ந்து
உன்னை நோக்கிச் சாய்ந்தது

என் தந்தையோ
நீரிழிவு நோயையும்
உயர் இரத்த அழுத்தத்தையும்
“நல்ல மனம்” என்ற இன்னொரு நோயையும்
எனக்குக் கடத்திவிட்டார்

அவர் ஓர் எளிய விவசாயி

ஒவ்வொரு காலையிலும்
தன் குடும்பத்தையே
மனச்சாட்சியின் மீது சுமந்தபடி
வேலைக்குப் புறப்படுவார்

முதுகைக் குனிந்து நிலத்தை உழுவார்

ஏழு பேர் கொண்ட குடும்பமும்
அவர்களுக்கு உணவளிக்க வேண்டிய
கவலையும்
தன் முதுகிலிருந்து கீழே
விழுந்துவிடக் கூடாது என்பதற்காக

இப்படித்தான் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்
இப்படித்தான் உன்னையும் காதலிக்க விரும்புகிறேன்
எளிமையாக
சாதாரண மக்களின் காதலைப் போல
கவித்துவம் எதுவுமின்றி

2.

நான் அவர்களிடம் சொன்னேன்
நான் நிரபராதி என்று
என் முட்டாள்தனத்தால்
வாழ்க்கையின் பிணத்தை
முதலில் தொட்டவள் நான்தான்
அதனால்
என் கைரேகைகளும்
அந்தக் குற்றத்தில் சிக்கிக்கொண்டன

நான் அவர்களிடம் சொன்னேன்
பகல் எனக்கு நியாயம் செய்யவில்லை
அதனால்
இரவில் என் தூண்டிலை வீச வேண்டியிருந்தது

நான் அவர்களிடம் சொன்னேன்
ஒவ்வொரு முறை தூக்கத்திலிருந்து விழிக்கும்போதும்
பல துப்பாக்கிகள்
என் தலையை நோக்கித் தங்கள்
குழல்களை நீட்டியிருப்பதைக் காண்கிறேன் என்று

நான் அவர்களிடம் சொன்னேன்
தலைகுனிந்து நடப்பதற்குப் போதுமான
நிலநடுக்கங்களைச் சேகரித்துவிட்டேன் என்று
என் அலமாரிக்குள்
இன்னும் சில பேய்களைச் சேர்க்க விரும்பவில்லை
சலிப்புடனேயே திருப்தியடைந்துவிட்டேன்

நான் அவர்களிடம் சொன்னேன்
இத்தனை இடிபாடுகள் என் தலைக்குள் குவிந்த பிறகும்
என் குழந்தைப் பருவம்
என்னைத் திரும்பிப் பார்க்கும்போதெல்லாம்
அநீதி இழைக்கப்பட்டவளாக உணர்ந்த பிறகும்
நான் ஒரு கவிஞரா இருப்பதற்குத் தகுதியானவள் என்று

3.

நான் ஒரு கோமாளியாக வேலை செய்கிறேன்

ஒவ்வோர் இரவும்
உலகம் என்ற பெயருள்ள
ஒரு மட்டமான நகைச்சுவையின் மீது
படுத்துத் தூங்குகிறேன்

பிரச்சினை என்னவென்றால்
படுக்கைக்குக் கீழே இருக்கும் அரக்கனைத் தவிர
வேறு யாரும் அதைப் பார்த்துச் சிரிப்பதில்லை

அந்தப் படுக்கை அரக்கன்
கற்பனையோ
குழந்தைப் பருவத்தின் மாயையோ அல்ல

அது மனச்சோர்வின் ஒரு தாக்குதல்
நவீன அறிவியல் அதற்கு வைத்த பெயர் அதுதான்

இப்போதும் அது சுதந்திரமாகத் திரிகிறது
தெருக்களிலும் வீடுகளிலும்
கொண்டாட்ட அரங்குகளிலும் அலைகிறது

ஆண்களையும் பெண்களையும்
ஏன், குழந்தைகளையும்கூட
முழுவதுமாக விழுங்குவதை நான் பார்த்திருக்கிறேன்

அவர்களுடைய சிரிப்புகளைப் பசையாகத் தடவி
தன் ரொட்டியைச் சாப்பிடுகிறது

பிறகு, மனித மேம்பாட்டுக்கான முழக்கங்களையும்
டாக்டர் ஃபிலின் உரைகளையும்
தன் வயிற்றிலிருந்து ஏப்பமிட்டபடி
அவர்களது படுக்கைகளுக்குக் கீழே நுழைந்து
உறங்கிவிடுகிறது

4.

என் தலை
நான் பிறப்பதற்கு முன்பே அப்பா
நட்டுவிட்ட கடைசிச் செடித் தொட்டி
அதில் நினைவுக்கான ஒரு விதை
அன்புக்கான ஒரு விதை
கடவுள் மீதான பயத்திற்கான ஒரு விதை

தன் முகத்தின் மானத்தைக் காப்பாற்றச் சிந்திய கண்ணீரால்
அதற்குத் தண்ணீர் ஊற்றினார்
தன் ஒழுக்கத்தின் சத்துக்களால்
அதன் மண்ணை வளப்படுத்தினார்

என் தலை பெரிதாக வளர வளர
அம்மா தோட்டக் கத்தரியால்
அதன் எண்ணங்களைச் சிறிது கத்தரித்துவிடுவாள்

பிறகு அதன் நடுவில்
ஒரு கோப்பை தண்ணீரை வைப்பாள்
என் கற்பனையிலிருந்து
பறவைகள் தண்ணீர் குடிப்பதற்காக

சில நேரங்களில் தூக்கத்திலிருந்து எழுந்தபோது
உதிர்ந்த தலைமுடிக்குப் பதிலாக
பட்டாணி
கொண்டைக்கடலை
பருப்பு
நெல்மணி
என் தலையிலிருந்து விழுந்து சிதறிக் கிடப்பதைக் காண்பேன்

என் மனதில் கட்டுக்கடங்காமல் வளரும் செடிகளை
அடக்கிப் பழக்குவதிலேயே
என் பெரும்பாலான நேரம் கழிகிறது

என் நம்பிக்கையில் முளைத்த கள்ளிச் செடிகளை
அவர் பிடுங்கியபோது
ஒருநாள்கூட பாதுகாப்புக் கையுறைகளை அணிந்ததில்லை

அதனால் அவருடைய கைகள் இரத்தம் சிந்தின
எதிர்த்திசையில்
கீழிருந்து மேலாக
ஏழு வானங்களும் கறைபடும்வரை

என்னை வளர்ப்பதையே
அப்பா தனது விருப்பமான பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார்
தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டு,
என் உள்ளத்தை ஒரு சிறிய தொட்டியில் வளர்த்தார்

‘ஜெயின்ட் ஜாக்’ கதையில் வரும்
அவரைச் செடியைப் போல
என் கழுத்து நீண்டு வளர்ந்தது
கடவுளை எட்டியதும்
கேள்விகள் நிறைந்த ஒரு கட்டையால்
அவருடைய வானத்தைக் குத்தத் தொடங்கினேன்

5.

நேற்று ஒரு தந்தை தன் மகளைக் கொன்றான்
அவளைச் சிலர் விபச்சாரி என்று அழைத்ததைக் கேட்டதால்
அவளது வாயை அகலத் திறக்கச் செய்தான்
அவளது பாவங்களின் வட்டம் பெரிதாகும் வரை
அழுகிப்போன மூன்று பெரிய கரண்டி அவதூறுகளை
விழுங்கும்படி கட்டாயப்படுத்தினான்
“திமிர்பிடித்தவள்”
“இறைநம்பிக்கையற்றவள்”
“பெண்”

முதல் அவதூறை அவள் இரண்டு லிட்டர் குடித்தாள்
அது அவளது ஒழுக்கத்தின் வழியே பெருக்கெடுத்து ஓடியது
இரவில் படுக்கையில் அவளது திமிர் வெடித்துச் சிதறியது

பிறந்த நாளிலிருந்தே
உலகத்தின் தீமைகள் அவளுக்குள் ஊற்றப்பட்டன
அவற்றைத் தனக்குள் அடக்கிக்கொண்டாள்
பிறகு
தனக்குச் சொந்தமில்லாத அழுக்கைக்
கழுவிக்கொள்ள எழுந்தாள்

இரண்டாவது அவதூறை
ஏதோ ஒரு மதகுரு
மருந்தேற்றும் குழாயில் நிரப்பி
அவளது நம்பிக்கைக்குள் செலுத்தினான்
பதப்படுத்தப்பட்ட மதப் பிரசங்கங்களால்
அவளது நம்பிக்கை வீங்கிப்போனது

அவற்றைச் செரிக்க
அவளது மதநம்பிக்கைக்கு
நூற்றாண்டுகள் தேவைப்பட்டன

அவளது நம்பிக்கையை விழுங்குவதற்கு முன்
“இறைவனின் பெயரால்” என்று சொல்லும்படி
அந்த மதகுரு அவளைக் கட்டாயப்படுத்தினான்
அவனது பாவங்களை
இரவு உணவின் முக்கிய உணவாக
அவள் விழுங்க வேண்டியிருந்தது

மூன்றாவது அவதூறை
அவள் துப்பிவிட நினைத்தாள்
ஆனால்
தன் தந்தையின் வாயில்
ஏற்பட்ட ஒரு அடைப்பு போன்ற வேதனையிலிருந்துதான்
தான் பிறந்ததை நினைத்துக்கொண்டாள்

அன்று
அவளது தாய் தந்தையின் முதுகில்
மூன்று முறை அடித்தாள்
அவளோ
அவசரமாகத் துப்பப்பட்ட எச்சிலைப்போல
இந்த உலகத்திற்குள் வந்தாள்
*

ஒரு பெண்ணிடமிருந்து இரத்தம் வழியும்போதுதான்
இந்தச் சமூகம் பாலியல் வன்முறையைக் கவனிக்கிறது


ஆசிரியர் குறிப்பு

கீதிர் பாத்தி, இலங்கை கிழக்கு மாகாணத்தில் பாளச்சோழையைச் சேர்ந்தவர். தமிழ் மற்றும் அரபி மொழி ஆசிரியையாக பணியாற்றுகிறார். சிறுவயதில் இருந்தே அரேபிய இலக்கியத்தில் அதீத நாட்டம் கொண்டிருந்தார். அதன் தாக்கத்தில் எளிமையான மொழியில் ஆழமான கவிதைகளை சமூக ஊடகங்களில் எழுதி வருகிறார்.

Previous Post

புறங்கழுத்து அடியும் பூக்கும் பாலையும்

Next Post

கடிதங்களில் கரைந்த காலங்கள்

களம் புதிது

களம் புதிது

Next Post
Kadithangalil Karaintha Kalangal - Arsha

கடிதங்களில் கரைந்த காலங்கள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு