சமீபத்தியவை
ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள் ஆண்வாரிசு ஒத்தைக்காதன்
ஈமத்தீ பாப்கார்ன் பத்துநாட்கள் ஆண்வாரிசு ஒத்தைக்காதன்
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

நா. பாலா கவிதைகள்

நா பாலா By நா பாலா
1 hour ago
A A
0
Na Bala Kavithaigal

1. தாழ்

‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’
என்கிறார்.
அழைத்துச் செல்கிறேன் அவரை
குடும்பநல நீதிமன்றங்களுக்கு
மனநல மருத்துவமனைக்கு
மதுக்கூடங்களுக்கு
பிணவறைக்கு
ப்ளாக்பஸ்டர் திரைப்படம் ஒன்றுக்கு.

கிணுங் கிணுங் என
சலசலக்கும் சாவிக்கொத்தொன்றை
வேட்டியில் சொருகியபடி
வாக்கிங் சென்று கொண்டிருக்கிறார்
இப்போதெல்லாம்.

2. கடுத்தது காட்டும்

‘ஊரெங்கும் சுற்றித் திரிந்த
அந்தப் பரதேசிக்கு
பால் வடியும் சாந்த முகம்.
இல்லறம் பேணிய எனக்கு
ஏனடா தாடி வைத்தீர்கள்’
என பஞ்சாயத்துக்கு நிற்கிறார்
வள்ளுவர்.
‘விவரம் புரியாம இருக்கீங்களே’
என அவரிடம் சொல்கிறேன்
அழகாகக் கத்தரிக்கப்பட்ட தாடியுடைய கனவான்கள்
கோட் சூட்களில் கம்பீரமாக நடந்து செல்வதை
கோடிகளில் சம்பளம் பெறுவதை
அழகிய பெண்களுடன் கட்டிப் புரள்வதை
பெரும் தேசங்களை ஆள்வதை.
‘தாடி கெத்து தான் போல’
என்றபடி
சலூன் ஒன்றுக்கு
அழைத்துப் போகச் சொல்கிறார்.

3. Tomorrowland

அவனும் அவளும் முத்தமிட்டுக் கொண்டனர்.
அவனும் அவனும் முத்தமிட்டுக் கொண்டனர்.
அவளும் அவளும் முத்தமிட்டுக் கொண்டனர்.

பின்பு பூனைகள் முத்தமிட்டுக் கொண்டன.
மீன்களும் அரவங்களும்
அத்தனை அரக்கர்களும்
அத்தனை கடவுளர்களும்
முத்தமிட்டுக் கொண்டனர்.

அப்படித்தான்
ஒரு பிரபஞ்சம் உருவானது.

4. கால பைரவி

அத்தனை இலைகளையும் உதிர்த்து
அம்மணக்கட்டையாக நிற்கிறது இம்மரம்.
ஒரே கூச்சமாகப் போய்விட்டது.
விரைந்து சென்று
பிரமாண்ட வெள்ளைப் போர்வையொன்றைத்
தைத்து எடுத்துத் திரும்புகிறேன்.
அதற்குள்,
கிளைகளில் அமர்ந்து
மரத்துக்கு வர்ணம் பூசிக் கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி.
குளிரில் நடுங்கும் அந்த பிஞ்சு விரல்களுக்கு
கையுறை வாங்க போய்க் கொண்டிருக்கிறேன்.

5. அந்திமக்காலங்களைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை

மண்ணை
பொன்னை
விண்ணை
மக்களின் மனங்களை
ஆண்டு
ஆண்டு
சலிப்பாய் இல்லை?

கரை ஒதுங்கியிருக்கிற இச்சிப்பிகள்
நதியில் மிதந்து செல்கிற இப்பெருங்கிளை
தன் உடலைச் சுருக்கிக் கொண்டு
இப்பலூனில் பறந்து செல்கிற காற்று.
இவையெவையும்
எதையும் உணர்த்தவில்லையா?

சரி, இப்பூனைகளைப் பாருங்கள்.
அவை காணாத வேட்டைகளா?
தவழ்ந்திராத அரச மடிகளா?
இப்போதோ
ஜன்னல்களில் அமர்ந்து
தேமேவென்று வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Previous Post

சீனு ராமசாமி கவிதைகள்

Next Post

சக்தி கவிதைகள்

நா பாலா

நா பாலா

நா. பாலா, வாசிப்பு, சினிமா, மற்றும் இலக்கற்ற பயணங்களில் ஆர்வம் கொண்டவர். இவரது கவிதைகள் சொல்வனம், தங்கமீன், சிராங்கூன் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. அரிதாகக் பயணக்கட்டுரைகளும் எழுதுவதுண்டு. ‘அரூ’ கனவுருப்புனைவு மின்னிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தற்போது பெல்ஜியத்தில் வசிக்கிறார்.

Next Post
Sakthi Kavithaigal

சக்தி கவிதைகள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026
Paththu Natkal

பத்துநாட்கள்

November 1, 2026
Aan Varisu

ஆண்வாரிசு

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (44)
  • படைப்புகள் (40)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Eemaththee

ஈமத்தீ

November 1, 2026
Popcorn

பாப்கார்ன்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு