சமீபத்தியவை
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
பிள்ளைக்கனியமுதே… – 4 இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும் எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம் பாவ் ஈமத்தீ
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு
No Result
View All Result
களம்புதிது
No Result
View All Result
முகப்பு இதழ்கள் இதழ் – 2

சூரிய காலடி பட்டத்திரியும் – யட்சியும்

சௌமியா சுதாகரன் By சௌமியா சுதாகரன்
7 hours ago
A A
0
Suriyakaladi Pattathiriyum Yatchiyum

நாககேசரம் மரங்கள் நிறைந்த குமாரநல்லூர் கிராமத்தில் புது விடியலுக்காய் காத்திருந்த பறவைகள் இரண்டாம் யாமம் முடிந்ததை அறிந்து ஊர் மக்களை திருப்பள்ளி எழுப்ப ஒலியெழுப்பின. செம்போத்து பறவை- யினங்கள் தன் இணைகளோடு ஒன்றாக இரைதேட புறப்பட்டன. அருவிகளும் காட்டாறுகளும் வாய்க்கால்களும் நீரோடைகளும் நிறைந்த அப்பகுதியின் தெற்கே அந்த கிராமத்திற்கே அடையாளமாக அமைந்த பிரம்மாண்டமான நெட்டாஞ்சேரி மனையிருந்தது. மனையை சுற்றி நெல்லிக்காய் தோட்டங்களும்  கொன்றைப் பூக்களும் மலர்ந்திருந்தன. அது பார்ப்பவர் கண்களை கொள்ளை கொள்ளும் படியாக அமைந்திருந்தது. காட்டுவாத்துகளும் மயிலினங்களும் அசுணாப் பறவைகளும் தோட்டங்களுக்குள் புகுந்து விடியலை கொண்டாடின. அந்த வீட்டின் உரிமையாளரான பட்டத்திரி,  அல்லியாம்பல்  பூத்து கிடந்த குளத்தின்  தண்ணீர் நிறைந்த படிக்கட்டுகளில் கால் வைத்தார். குளிர் உச்சம் தலைவரை வியாபித்து உடல் சிலிர்த்தது. அதனை பொருட்டாக கருதாமல் மூழ்கிக் குளித்து மனையில் உள்ள அம்மனுக்கு பூஜைகள் செய்ய தயாரானார். 

செண்பக பூக்கள் நிறைந்த தட்டோடு பூஜை அறைக்கு சென்றவர், தேவி மகாத்மியம் ஓதி, மலர்களால் அர்ச்சனை செய்து முடித்து  வெளியே வந்தார். அவருக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை இருந்தது.  ஆண்டுதோறும் வடக்கு நாதன் கோவிலில் நடைபெறும் திருச்சூர் பூரத்திற்கு சென்று வர வேண்டுமென. எல்லா வருடமும் மேடம்  மாதம் அதாவது ஏப்ரல் மே மாதங்களில் அந்த விழாவானது நடைபெறும். இவ்வாண்டு எப்படியாவது சென்று விட வேண்டும் என நினைத்துக் கொண்டேயிருந்தார். அதனை தன் மனைவியிடம் அடிக்கடி புலம்புவார்.

உணவறையில் வந்த கணவனை பார்த்த தம்புராட்டி(மனையாள்)  அவரிடம் நாளை திருச்சூர் பூரம் என்பதை  இப்படியாக கூறினாள்.

“நீண்ட காலமாக நீங்கள் காத்திருந்த திருநாள் வந்துவிட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?”

பட்டத்திரி திருதிருவென முழித்தார். மனைவி மீண்டும் தொடர்ந்தாள்.

” நாளை தான் திருச்சூர் பூரம்”

அதனைக் கேட்ட பட்டத்திரி “அப்படியா எவ்வளவு விரைவாக நாட்கள் நகர்கிறது ஒவ்வொரு ஆண்டும் செல்ல வேண்டும் என்று பேராவல் கொள்வேன் ஆனால் என்னமோ அது தடைப்பட்டு கொண்டேயிருக்கிறது” என்று கூறி பெருமூச்சு விட்டார். தனது பால்யத்தில் தந்தையின் தோளில் மீது அமர்ந்து பூரம் பார்த்த ஞாபக பரப்பிலிருந்து நினைவுகளை ஓட விட்டார். பூரங்களின் தாய் என கூறப்படுகின்ற திருச்சூர் பூரம்,  தொடர்ந்து 36 மணி நேரம் கோலாகலமாக நடைபெறும். எங்கு பார்த்தாலும் யானைகளின் அணிவகுப்பும், காது பறைகள் கிழிந்து விடும் அளவுக்கு செண்டை மேளமும், குடமாற்றம் என்று சொல்லப்படும் வண்ணமயமான குடைகளைக் கொண்டு நடைபெறும் நிகழ்வு. வாழ்வினுடைய இன்ப துன்பங்களை மட்டுமல்ல மனிதர்களை மனிதர்களே மறந்துவிட்டு, குதுக்கலிக்க செய்த அற்புதமான அந்த நேரத்தை எண்ணி மகிழ்ந்தார். கணவன் எதையோ யோசித்து மகிழ்வதை பார்த்து புன்னகைத்தாள் மனைவி. தன் நினைவுக்கு வந்தவராய் மீண்டும் தன் இல்லத்தரசியிடம் நான் கண்டிப்பாக பூரம் பார்க்க செல்வேன் என்று கூறி, தன் நண்பனையும் அழைத்துக் கொண்டு யாத்திரைக்கான பொருட்களையும் தேவி மகாத்மிய கிரந்தத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

நடைபயணம் மேற்கொண்ட போது நண்பனோடு பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் பட்டத்திரி.

” கேசவா நீ பூரம் பார்த்திருக்கிறாயா”

என கேட்டதற்கு

” இல்லை எனக்கு இதுதான் முதல் முறை” என்று பதில் கூறினான் கேசவன். மேலும் பட்டத்திரி “நான் சிறு வயதில் அப்பாவின் கைகளைப் பிடித்து நடந்த தடயங்கள் இன்னும் இந்த வழியில் நிலைத்திருக்கும்” என பெருமையாக  கூறியதைக் கேட்ட கேசவன்

” அப்படியா அந்த தடயங்கள் அழிந்து விடாமல் மெதுவாக காலடிகளை எடுத்து வையுங்கள் என்று கூறி சிரித்தார்”

சிறு குன்றுகளையும் நீண்ட வாய்க்கால்களையும் கடந்து சென்று கொண்டிருக்கும்போது இருவருக்கும் சிறிது களைப்பு தோன்றியது. அவர்கள் ஓடைநீரில் கைகளையும் கால்களையும் முகத்தையும் கழுவிய போது சற்று ஆசுவாசமானது. சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் தோள் பையிலிருந்த உணவை உண்டு அருகில் இருந்த அடர்ந்த மாமரத் தோப்பில் தோளில் கிடந்த துண்டை விரித்து, கையை தலைக்கு வைத்து படுத்தனர். படுத்த நொடி பொழுது நடந்து வந்த களைப்பும் உணவு உண்ட களைப்பும் ஒருங்கே சேர அயர்ந்து உறங்கினர். 

அந்த தோப்பில் மாம்பழங்கள் நிறைய காய்த்திருந்தன. அதன் வாசனையால் கவரப்பட்ட உயிரினங்கள் மாம்பழத்தை சுவைக்க தோட்டத்திற்குள் நுழைந்து கத்தின.  வவ்வால்களின் கீச்சிடும் குரல் கேட்டு எழுந்த பட்டத்திரி தன் நண்பனான கேசவனையும் எழுப்பினார்.

” கேசவா நேரம் ஆகிவிட்டது அந்தி கருக்கலில் முன்பு யட்சி பறம்பை( யட்சிகள் நடமாடுமிடம்) கடந்து விட வேண்டுமென்றார்.”யட்சி பறம்பு என்ற வார்த்தையை கேட்ட கேசவன் பதட்டமானான். அவ்விடத்தை பற்றி பலவிதமான கதைகளை அவன் சிறு வயது முதலே கேட்டிருக்கிறான்.

” பட்டத்திரி யட்சி பறம்பா!!!”  என்றவனிடம்

” பயப்படாதே! சென்று விடலாம் இருள் சூழ்வதற்குள் புறப்படு”என்றார் பட்டத்திரி.

மாலை நேர சூரியன், மங்கிய கல் விளக்கின் வெளிச்சமாக மிளிரத் தொடங்கினார். கூடடையும் பறவைகளின் ஒலியும் ஒருபுறம் கேட்ட வண்ணமாகயிருந்தது. திடீரென எங்கிருந்தோ பால பூவின் வாசனை நாசியை துளைத்தது, கூடவே பனம் பழத்தின் வாசனையும் சேர்ந்து கொண்டது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரு விதமான பதட்டத்தோடு நடந்தனர். பனை மரத்தின் ஓலைகளும் கிளஞில்களும் ஆங்காங்கே கிடந்தன.  காய்ந்த பனை ஓலைகளின் மீது காட்டு பல்லிகளும் அரணைகளும் ஓணான்களும் ஓடிய போது பெருத்த இடியோசை போல  கேட்டது.

பட்டத்திரி பாடு ஒரு விதமான பதட்டத்தோடு

” கேசவா என்ன செய்ய இங்கேயே தங்கி விடுவோமா” என கேட்டார்.

கேசவன் பயத்தில் தொண்டையை செருமினான், வார்த்தைகள் வரவில்லை உமிழ்நீர் வற்றியிருந்தது.

“போகலாம் என உடல் மொழியால் பதில் உரைத்தான்.”

திடீரென வண்ணாத்துப் புள்ளுகளின் ஓசை கேட்டது. தொடர்ந்து பொன்வண்டுகளின் ரீங்கார சத்தமும் கேட்ட போதுதான் பட்டத்திரிப்பாடின் கண்ணில் அந்த மலர்ச்சோலைப்பட்டது. அவர் அப்போது நிம்மதியாக மூச்சு விட்டார். கேசவன் வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் காற்றை உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் தள்ளினான். அப்படியே சிறிது நேரம் மகிழ மரத்தடியின் கீழ் நின்றனர்.  அவர்களின் எதிர்புறத்தில்  இரண்டு பெண்கள் கையில் தாலத் தட்டுகளுடன் நடந்து வந்தார்கள்.

தாலத் தட்டுகளில் பழ வகைகளும் பூக்களும் கோவிலுக்கு தேவையான வெற்றிலை, பாக்கு , சாம்பிராணி கற்பூரம் போன்றவையிருந்தது. அந்த பெண்கள் கேசவனையும் பட்டத்திரியையும் பார்த்து புன்னகைத்தார்கள். இவ் வழியாக எங்கே செல்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டார்கள். 

” நாங்களா பூரம் பார்க்க செல்கிறோம் அழகிகளே” என்று  பட்டத்திரி கூறினார்.

 அவர் அழகிகளே  என்று கூறியது உண்மைதான். தாமரை தடாகத்தில் வண்டுகள் போன்ற கண்கள்.  இடுப்பளவு தலைமுடி, ஆடை, அலங்காரங்களென இருவரையும் பார்ப்பதற்கே தேவ கன்னியர்கள்  போல தோன்றினார்கள்.

” பூரம் பார்க்கவா? ஐயோ!!!  அடுத்த பகுதி யட்சி பரம்பாயிற்றே” என்றாள் பதட்டத்தோடு ஒருத்தி.

“ஆமாம் இரவாகிறதே எப்படி செல்ல போகிறீர்கள்” என்றாள் மற்றொருத்தி.

கேசவன் இவர்களின் அழகில் ஏற்கனவே மயங்கி இருந்தான். இப்போது அவர்கள் குரலிலும் மயங்கி விட்டான். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்  இருக்க சிரிப்பது போல நடித்தான்.

பட்டத்திரியும் கேசவனும் என்ன செய்வதென்னே தெரியாமல் இருந்தனர். அப்போது அந்தப் பெண்கள் மீண்டும் இவர்கள் முன் வந்து நின்றார்கள். இருள் சூழ ஆரம்பித்துவிட்டது. எங்கள் இல்லம் அருகில் தான் உள்ளது . இருவரும் இரவு பொழுதை இல்லத்தில் கழித்து விட்டு காலை செல்லுங்கள். இந்த காடு பல விசித்திரங்களை தன்னகத்தை கொண்டுள்ளது எனவும் இரவு நேரங்களில் இவ்வழியாக சென்றவர்கள் பின்னர் விடியலை பார்த்ததில்லை எனவும் கூறினார்கள். 

ஏற்கனவே இந்த விஷயங்களை கேள்விப்பட்டிருந்த இருவரும் மேலும் பயத்திற்கு ஆளானார்கள். பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இல்லறத்தில் சென்றால் அழகிகளை பார்க்கலாம், அவர்களோடு பழகும் வாய்ப்பும் கிடைக்குமென இருவரும் மனதிற்குள் நினைத்துக் கொண்டார்கள். யோசித்து முடிப்பதற்குள் மறுபடியும் இரு பெண்களும் தங்கள் இல்லத்திற்கு வருமாறு கூற இருவரும் அந்தப் பெண்களின் பின்னால் நடக்கத் தொடங்கினார்கள்.

 பட்டத்திரி கேசவனின் காதுகளில் மெதுவாக கூறினான் “கேசவா இரவு உல்லாசமாக இருக்க அழகிகளில் இருக்கிறார்கள்”

கேசவனோ என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாமலேயே தவித்தான். அவனுக்கு இவர் கூறியது எதுவும் காதல் விழவில்லை. அவர்கள் நடந்து வரும் வழியில் பேய் போன்ற தோற்றம் கொண்ட  புங்க மரத்திலிருந்து வெள்ளை நிற பூக்கள் தரையில் விழுந்த வண்ணம் இருந்தது. அம்மரம் நின்ற நில – முழுக்க பாதைகளில் மலர்களை பரப்பியது. அந்த அளவுக்கு பூக்களை உதிர்த்து கொண்டேயிருந்தது.

பட்டத்திரி அழகிகளை பார்த்து “நீங்கள் எங்கு சென்று வருகிறீர்கள்” என கேட்டார்.

நாங்கள் அருகில் இருக்கும் கோவிலில் வழிபாடு செய்து விட்டு வருகிறோமென பதில் கூறினார்கள்.

சிறிது நேரத்திலேயே அந்த பிரம்மாண்ட மாளிகை முன்பு நால்வரும் வந்து சேர்ந்தார்கள். வீட்டின் முன்றிலில் முல்லைப் பூக்களும் பிச்சிப் பூக்களும் பாரிஜாத பூக்களும் மஞ்சணாத்திச் செடிகளும் நிறைந்த அந்த மலர்வனத்தை இருவரும் கண் கொட்டாமல் பார்த்தனர். வாசலின் முன்பு  நீர் தடாகம், அதில் ஆம்பல் மலர்களும் மொட்டுக்களும், தடாகத்தில் வானத்து சந்திரனின் பிம்பம் தெரிந்தது.

வானளாவிய அந்த மாளிகை முழுக்க  தோரணங்களால் அலங்கரித்து, மேலும் மேல் மாடங்களில் தீபங்களும் ஏற்றப்பட்டிருந்தது. ஏதோ ஒரு கோவிலுக்குள் நுழையும் மனநிலையோடு இருவரும் மாளிகையினுள் காலடி எடுத்து வைத்தனர்.

விருந்தினரை வரவேற்று வரவேற்பறையில் அமர்த்தினார்கள். அவர்களின் குரலுக்கு ஓடோடி வந்த பணிப்பெண்களைப் பார்த்து விருந்தினருக்கு அறைகளை உடனே தயார்படுத்துமாறு ஆணையிட்டனர்.  விருந்தினர்களுக்கு கோப்பைகளில் பழச்சாறு பரிமாறப்பட்டது.  மாளிகையே விருந்தினர்களால் பரப்பரப்பானது. வேலை ஆட்கள் விருந்தினருக்கு விரைவிலேயே உணவினை தயார் செய்திருந்தனர். ஓவியங்களால் வரையப்பட்ட தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது.

பட்டத்திரி கொஞ்சம் தெளிவாக இருந்தார். கேசவனோ இன்னும் பித்து பிடித்த மனநிலையில் இருந்ததைப் பார்த்து, கேசவாயென உரக்க கத்தினார். அவர் கத்தியதைக் கேட்டும் மந்திரித்து விட்ட ஏதோப் போல சிரித்தப்படியே பட்டத்திரியைப் பார்த்தார். இங்கு நடப்பதை எல்லாம் பார்த்தால் எனக்கு ஒரு விதமான பயம் தோன்றுகிறது, சில சந்தேகங்கள் இருப்பதாகவும் மெதுவான குரலில் கேசவனிடம் கூறினார்.  இவர் பேசுவதை கேட்கும் மனநிலை கேசவனுக்கு இல்லையென அவர் முகத்தைப் பார்த்தவுடன் தெரிந்ததுக் கொண்டார்.

உணவருந்திய பின் இருவரும் தனித்தனி அறைக்களுக்கு சென்றனர். பட்டத்திரி தன் கையில் வைத்திருந்த துணி பையை அறையில் எடுத்துச் சென்றார். அறைக்குள் நுழைந்தபோது கடல் அலையின் சத்தமும் கடல் காற்று வீசுவது போலவும் தோன்றியது. பட்டத்திரியின்  படுக்கை அறையில் சித்திர வேலைபாடுகளுடன் கூடிய கட்டில் போடப்பட்டிருந்தது. அதில் மான் ஒன்று புலியை தாக்குவது  போன்ற சித்திரம் பொறிக்கப்பட்டிருந்தது. ஒருவிதமான வாசமும் வீசியது.

பட்டத்திரிக்கு இரவு உறங்கும் முன் பிராத்தனைச் செய்யும் பழக்கமிருந்தது. அதற்காக கிரந்தத்தை கையிலெடுத்து பிராத்தனையை முடித்தார். பின்னர் கிரந்தத்தை கையில் வைத்துக் கொண்டே படுத்தார். நடுயாம பொழுதில் ஆந்தைகளின் அலறல் கேட்டது. அப்போது இரு அழகிகளும் தங்களை முழுக்க அலங்காரம் செய்து, ஒருத்தி பட்டத்திரியின் அறையிலும் மற்றெருத்தி பக்கத்திலிருந்த கேசவன்  அறையிலும்   நுழைந்தனர்.

கேசவன் என்ன செய்வதென்று தெரியாமல் படப்படுத்தார். அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் பால் கவரப்பட்ட கேசவன் அவள் அருகே தன்னை அறியாமலே மெதுவாக நடந்தான். அழகி கேசவனின் கண்களே உற்றுப் பார்த்ததில் கேசவன் தன்னிலை மறந்தான். 

அதே நேரத்தில், பட்டத்திரியின் அறையில் நுழைந்த அழகி அவர் தூங்கும் அழகினை சிறிது நேரம் ரசித்தாள். பின்னர் அருகில் சென்று அவரை தொட எத்தனித்த நெடியில் கிரந்தம் மிளிந்தது. அதனைப் பார்த்த அழகி ‘கலகலவென’ சிரித்தாள். சப்தம் கேட்டு தூக்கம் கலைத்த பட்டத்திரியிடம், 

“நீ கையில் என்ன வைத்திருக்கிறாய்” என்று கேட்டாள். பட்டத்திரியோ கிரந்தம் என பதில் கூறினார். அவ்வளவுதான் அழகி

” கையில் உள்ளதை கீழே போட்டு விடு என கத்தினாள்” அவள் சொன்னதை கேட்ட பட்டத்திரி  தன் மார்போடு கிரந்தத்தை இறுகப்பிடித்தார். அவள் மறுபடியும் கத்தினாள். அவளின் குரல் பெருமழை பெய்யும் போது கேட்கும் இடியோசை போன்றிருந்தது. உடல் முழுக்க நடுநடுங்க பட்டத்திரி தன் நண்பனான கேசவனின் பெயரை உரக்க கத்தினான்.

கேசவனின் மறு மொழி வருமென ஒரு நிமிடம் காத்திருந்தார் பட்டத்திரி. அழகியோ அவரை விட்டு பத்தடி தள்ளி நின்று கிரந்தத்தை கீழே போடுமாறு கத்திக்கொண்டே இருந்தாள். அவரோ “கேசவா! கேசவா” என அலறினார்.  இருவரும் சப்தமிட அவ்விடமே ஏதோ போர்க்களம் போல தோன்றியது.

பக்கத்தில் இருந்த அறையிலிருந்து எந்த விதமான சப்தமும் வரவில்லை. கேசவன் ஏன் பதில் தரவில்லை என்ற கேள்வி ஆழமான அதிர்வை பட்டத்திரிக்கு ஏற்படுத்தியது. அறையில் பட்டத்திரி ஒருபுறமும் அழகி ஒருபுறமும் நின்று கொண்டேயிருந்தனர்.அழகியின் வசீகரமும் ஒரு விதமான வாசனையும் பட்டத்திரியை மயக்கமடைய செய்ய அப்படியே படுக்கையில் விழுந்தார். மயக்கமடைந்தாலும் கிரந்தத்தை கையில் இறுக பிடித்து பிடித்திருந்தார்.சில  நாழிகையிலேயே நினைவு வர கண் விழித்தார், அப்போது அழகி கட்டிலுக்கு அருகில் நின்று கிரந்தத்தை அவர் கையிலிருந்து எடுக்க முயற்சி செய்ய மறுபடியும்  கிரந்தம் மிளிர்ந்தது.

அந்த நேரம் நிசப்தமானது அறை. பெருத்த காற்று வீசியது, காற்றில் தீபங்கள் அணைந்தன. பட்டத்திரி கண்களை இறுக மூடி கிரந்தத்தையும் தன் உடலோடு வைத்திருந்தார். 

சிறிது நேரத்திற்கு பிறகு யாரோ நீரோடையில் தண்ணீர் குடிப்பது போல சத்தம் கேட்டது கூடவே எலும்புகள் ஒடியும் சத்தமும் கேட்டது. நம்பூதிரி பேச்சு மூச்சின்றி  கிடந்தார். இரவு பொழுது இப்படியே கடந்தது. விடியலில் கண் திறந்த போது பனைமரக் காட்டில் உயரமான ஒரு பனை மரத்தின் மேல் பனையோலையில் படுத்துக் கொண்டிருந்தார். 

கண்களை துடைத்துக்கொண்டு மறுபடியும் பார்த்தார். எவ்வளவு உயரமான பனைமரம், எப்படி இறங்குவது? பனைமரமா? மாளிகை எங்கே? அழகிகள்? கேசவன்? என்ற பல கேள்விகளோடு கையில் இருந்த கிரந்தத்தோடு பனைமரத்திலிருந்து இறங்க முயற்சித்தார். பனைமர மட்டையிலிருந்து முட்கள் குத்தின, இருந்தாலும் எப்படியோ உடலில் காயங்களோடு கீழே இறங்கினார்.

அடுத்த பனை மரத்தின் அடியில் சில எலும்புகளும் தலைமுடியும் கேசவனின் ஆடையும் கிடந்தது. பட்டத்திரிக்கு அப்போதுதான் புரிந்தது. மாளிகை பேரழகிகள் எல்லாம் மாயை, கேசவனை யட்சி கொன்று தின்றுவிட்டாள்.  நான் தப்பியது கிரந்தத்தால் மட்டுமென புரிந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்தார். ஊர் மக்கள் அனைவரும் பயம் கலந்த மரியாதையோடு பட்டத்திரியை பார்த்தனர். 

கேசவனின் மனைவி மூன்று மாத கருவை சுமந்து கொண்டு இருந்தாள். தன்  கணவன் இறந்த துக்கத்தை ஏற்றுக் கொண்டு  குழந்தைக்காக வாழ்ந்து வந்தாள். தனிமையில் இருக்கும் பொழுது அவள் தன் குழந்தையோடு பேசுவாள். அப்பாவை கொன்ற யட்சி குறித்து குழந்தை கருவிலேயே அறிந்து கொண்டது. பருவங்கள் மாறின, குழந்தை வயிற்றில் வளர்ந்து கொண்டே வந்தது. அன்று முழு பௌர்ணமி அவள் சூரியனைப் போன்ற ஒளி மிகுந்த ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

குழந்தையை சீராட்டி வளர்த்தாள் தாய், தாயின் அரவணைப்பில் குழந்தை வளர்ந்தது. ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் கேசவனின் மரணம் குறித்து பல விதங்களில் கதைகளை ஊருக்குள் பரப்பி இருந்தனர். குழந்தைக்கு தாய் ‘பைரவன்’ என பெயரிட்டாள். குழந்தையின் காதுகளுக்கு அவன் தந்தையின் மரணம் குறித்து கேட்க வேண்டிய நிலை உண்டானது. சிறிது வளர்ந்த பின் அவன் யட்சியை கனவு காண தொடங்கினார். பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்தான். அவனுக்கு எப்படியாவது தந்தையை கொன்ற யட்சியை கண்டுபிடிக்க வேண்டும். 

சிறிது நாட்களிலேயே அந்த எண்ணம் வாழ்வின் லட்சியமாக மாறியது. பல கலைகளை கற்றான், மந்திரங்களையும் தந்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். தவங்கள் பல மேற்கொண்டான், யாகங்கள் நடத்தினார் மேலும் பலமடைய பிரபஞ்ச சக்தியை நாடினான். தன்னுடைய லட்சியம் நிறைவேறுவதற்கு இன்னும் பல ஆற்றல்கள் அவனுக்கு தேவைப்படுவதாக தோன்றியது.

தன் குருமார்களை மனதில் நினைத்து சூரியனை நோக்கி கடும் தவம் மேற்கொண்டான். பைரவனின் தவ வலிமை கண்டு மனம் இரங்கிய சூரிய தேவன் ஒரு வயதான பெரியவர் உருவத்தில் வந்து மந்திர உபதேசங்களை கொடுத்தார். யார் இந்த பெரியவர் என எண்ணிய பைரவனை மேலும் பல சோதனைகளுக்கு உள்ளாக்கிய பின்னரே தன்னுடைய உண்மையான உருவத்தோடு பைரவனுக்கு காட்சியளித்து கிரந்தம் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

அதற்குப் பிறகு பைரவன் “சூரிய காலடி பட்டதிரி” என்ற பெயரில் பிரபலமானான், நான் கற்ற கலையினால் நிறைய நன்மைகளை மனிதர்களுக்கு செய்தான். தனக்கு ஏற்படும் சந்தேகங்களை கிரந்தத்தின் உதவியுடன் நீக்கினான். எவ்வளவு புகழ் பெற்ற மனிதனாக இருந்தாலும் அவனுக்கு ஆணவம் என்பதே இருந்ததில்லை.

நான் கற்ற எல்லா ஆற்றல்களையும் பயிற்சியின் வழியாக பெற்றபின் ஒரு முறை யட்சிகளுக்காக சிறப்பு  யாகம் ஒன்றினை மேற்கொண்டார். அனைத்து மந்திரங்களையும் பயன்படுத்தி எல்லா யட்சிகளையும் ஒரே இடத்தில் வரவழைத்தான். பின்னர் அவர்களைப் பார்த்து என் தந்தையை கொன்றது யார் என வினவினான்? உண்மையை கூற வேண்டும் என கூறியவுடன் எல்லா எல்லா யட்சிகளும் நான் இல்லை, நானில்லையென உரக்க கத்தினார்கள். உடனே அவர்களிடம் இருந்து உண்மையை வரவழைக்க ஒரு தந்திரம் செய்தான். பொன் விளக்கு ஒன்றை ஏற்றி வைத்து எல்லோரையும் அதில் சத்தியம் செய்து சொல்ல சொன்னான். ஒவ்வொருவராக வந்து சத்தியம் செய்த பின் அவர்களை செல்வதற்கு அனுமதித்தான். கடைசியாக ஒரே ஒரு யட்சி மட்டும் விலகி நின்றாள்.

அவனுக்கு தெரியும் இதுதான் தன் அப்பாவை கொண்ட யட்சியென. அவள் பொய் கூறாமல் நான்தான் அன்று திருச்சூர் பூரம் பார்க்க வந்த ஒருவரை கொன்று தின்றதாக ஒப்புக்கொண்டாள்.  பட்டத்திரிக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது. என் தந்தையை கொன்ற உன்னை நான் யாக குண்டத்தில் இட்டு எரித்து விடுவேன் என கூறி  ஒரு மரப்பாவையை எடுத்து மந்திரங்களால் யட்சியை உருவேற்றி தந்தையை நினைத்து யாக குண்டத்தில் போட்டு எரித்தார். இத்தனை ஆண்டுகளாக பாலைவனமாக கிடந்த அவரது  மனதில் பெருமழை பெய்தது.

Previous Post

கடிதங்களில் கரைந்த காலங்கள்

Next Post

கல்பட்டா நாராயணன்  கவிதைகள்

சௌமியா சுதாகரன்

சௌமியா சுதாகரன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணக்காவிளை கிராமத்தில் வசித்து வருகிறார். கேரளா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நீராழி, உரை மஞ்சள் ஆகிய கவிதைத் தொகுப்பையும், பூநீரும் பூதசிந்தாமணி குளிகையும் என்ற ஆய்வு நூலை எழுதியுள்ளார். பறைச்சி பெற்ற பன்னிருகுலம் என்ற மலையாள வாய்மொழிக் கதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

Next Post
Kalpatta Narayanan Kavithaigal

கல்பட்டா நாராயணன்  கவிதைகள்

கருத்தைப் பதிவிடுங்கள் Cancel reply

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது. அவசியமான புலங்கள் * எனக் குறிக்கப்பட்டுள்ளன.

Archives

  • பிரபலமானவை
  • கருத்துகள்
  • சமீபத்தியவை
Ingirunthu Thodangukiren

இங்கிருந்து தொடங்குகிறேன்.. – 1

October 8, 2026
Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

October 8, 2026
Dharmaraj Periyasamy Kavithaikal

தர்மராஜ் பெரியசாமி கவிதைகள்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

October 8, 2026
Anilgalin Kuralil Pesubavan

அணில்களின் குரலில் பேசுபவன்

Editorial

பண்பாட்டுப் புலத்தில் ஒரு மீள்வரவு

Nova Lies Kavithaikal

நோவா லைஸ் கவிதைகள்

Koor Seevuthal

கூர் சீவுதல்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026
interview-issue-2

எவிடென்ஸ் கதிர் – சமூகப் பொறுப்புணர்வின் அடையாளம்

November 1, 2026
Paav

பாவ்

November 1, 2026
Kalamputhithu

மாற்று பண்பாட்டு அரசியல் உரையாடல்களுக்கான களம்.

பிரிவுகள்

  • ஆங்கில படைப்புகள் (3)
  • இதழ்கள் (48)
  • படைப்புகள் (44)

விரைவு இணைப்புகள்

  • இதழ்கள்
  • படைப்புகள்
  • தொடர்புக்கு

சமீபத்திய செய்திகள்

Pillai Kaniyamudhe 4

பிள்ளைக்கனியமுதே… – 4

November 1, 2026
Ingirunthu Thodangugiren

இங்கிருந்து தொடங்குகிறேன் – 2: வழங்குதலும் பெறுதலும்

November 1, 2026

© 2026 களம்புதிது - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Product successfully added to the cart!
No Result
View All Result
  • முகப்பு
  • இதழ்கள்
  • படைப்புகள்
    • தலையங்கம்
    • கவிதை
    • கட்டுரை
    • சிறுகதை
    • நேர்காணல்
    • தொடர்
    • மொழிபெயர்ப்பு கட்டுரை
    • மொழிபெயர்ப்பு கவிதை
    • மொழிபெயர்ப்பு சிறுகதை
  • பதிப்பகம்
    • புத்தகங்கள்
    • வகைப்பாடுகள்
    • எழுத்தாளர்கள்
    • மதிப்புரை
  • காட்சியகம்
    • நிகழ்வுகள்
    • புகைப்படங்கள்
    • காணொளிகள்
  • ஆங்கில படைப்புகள்
    • Poems
    • Stories
    • Articles
  • ஆசிரியர் குழு
    • கரிகாலன்
    • அசதா
    • கதிர்பாரதி
    • நர்சிம்
    • ஆமினா முஹம்மத்
  • தொடர்புக்கு